இந்தவார பண்டிகைகள்
ஆவணி மாதம் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உள்ள பண்டிகைகள்

செப்.1 ஆவணி 16: மாத சிவராத்திரி. அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குருபூஜை.
பெருவயல் முருகப்பெருமான் பவனி. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
செப்.2 ஆவணி 17: அமாவாசை விரதம். திருச்செந்துார், பெருவயல் முருகப்பெருமான் தேர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வெள்ளி கேடயம். சோளசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் பவித்ர உற்ஸவம் ஆரம்பம். இளையான்குடி மாறநாயனார் குருபூஜை.
செப்.3 ஆவணி 18: மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி பரமபதநாதர் திருக்கோலம். உப்பூர் விநாயகர் ரிஷப வாகனம்.
செப்.4 ஆவணி 19: கல்கி ஜெயந்தி. சந்திர தரிசனம். மிலட்டூர், தேவகோட்டை, திருவலஞ்சுழி விநாயகர் பவனி. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிேஷகம். மறைஞான சம்பந்தர் குருபூஜை.
செப்.5 ஆவணி 20: முகூர்த்த நாள். சாம உபாகர்மம். ஹரிதாள கவுரி விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணி திருவிழா தொடக்கம்.