ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடுவது அதிகம் ஆபத்தாகலாம்:

பருப்பை சரியான அளவில் உட்கொள்வதால், உடல் எடையை குறைப்பது

ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடுவது அதிகம் ஆபத்தாகலாம்:
பாதாம்

 உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதாம் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாதாம் பருப்பை சரியான அளவில் உட்கொள்வதால், உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. 

எனினும்,  பாதாம்  பருப்பை அதிகமாக உட்கொண்டால், அது நன்மைக்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், தேவைக்கு அதிகமாக பாதாமை உட்கொள்வதால், உடல் எடையும் அதிகரிக்கலாம். பாதாம் பருப்பை தேவைக்கு அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மற்ற தினசரி உணவுகளுடன் பாதாமையும் அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். எனவே, நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் துண்டுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

பாதாமில்நார்சத்துஅதிகம் உள்ளது. நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதிகப்படியான நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நீங்கள் பாதாம் பருப்புகளை அதிகமாக உட்கொண்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக உங்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். 

பாதாமில் குடலில் கரையும் ஆக்சலேட் அதிகம் உள்ளது. உடலில் அதிகப்படியான ஆக்சலேட் இருந்தால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, பாதாமை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்.

சிலர் பாதாம் பருப்புகள் அல்லது மற்ற நட்சுகளை உட்கொள்வதால் ஒவ்வாமை ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். உங்களுக்கு நட்சால் ஒவ்வாமை இருந்தால், பாதாம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பாதாம் பருப்பை உட்கொள்வதால் சிலருக்கு ஓரல் அலர்ஜி நோய்க்குறி உருவாகலாம். இதன் காரணமாக, உங்களுக்கு தொண்டை புண், உதடுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.