மதுரை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் கட்டணம் விபரம் உள்ளே

மதுரையிலிருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட்க்கு வந்தே பாரத் ரயில்

மதுரை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் கட்டணம் விபரம் உள்ளே
pm modi
மதுரை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் கட்டணம் விபரம் உள்ளே

மதுரை, திருச்சியில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கபபட வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் வெகு நாட்களாக   முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

வந்தே பாரத் ரயிலானது எட்டு பெட்டிகளுடன் மதுரையிலிருந்து காலை 5.15 மணிக்குபுறப்படுகிறது . வந்தே பாரத் ரயில் ( வண்டி எண்; 20671),

திண்டுக்கல்லுக்கு காலை 5.59 மணிக்கும், திருச்சிக்கு 6.50 மணிக்கும், கரூருக்கு 8.08 மணிக்கும், நாமக்கல்லுக்கு 8.32 மணிக்கும், சேலத்திற்கு 9.15 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு மதியம் 12.50 மணிக்கும், 1 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்து சேரும். 

அதுபோல மறுமார்க்கத்தில், புறப்படும்   பெங்களூர் கண்டோன்மெண்டில் இருந்த பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20672) கிருஷ்ணராஜபுரத்திற்கு 1.35 மணிக்கு வந்து சேரும். சேலத்திற்கு மாலை 4.50 மணிக்கும், நாமக்கல்லுக்கு 5.38 மணிக்கும், கரூருக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு இரவு 7.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 8.28 மணிக்கும், மதுரைக்கு 9.45 மணிக்கும் வந்தடையும்.

செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

திருச்சி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் 5 நிமிடங்கள் நின்று செல்லும். இதர ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும்.

 

கட்டண விபரம் 

பெங்களூர் - மதுரை (சேர்கார் கட்டணம் - ரூ.1,740) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ.3,060)

பெங்களூர் - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.1,645) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,870)

பெங்களூர் - திருச்சி (சேர்கார் - ரூ.1,250) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,270)

பெங்களூர் - கரூர் (சேர்கார் - ரூ.1,130) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,020)

பெங்களூர் - நாமக்கல் (சேர்கார் - ரூ.1,085) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,925)

பெங்களூர் - சேலம் (சேர்கார் - ரூ.1,000) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,750)

மதுரை - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.440) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.825)

மதுரை - திருச்சி (சேர்கார் - ரூ.555) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,075)

மதுரை - கரூர் (சேர்கார் - ரூ.795) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,480)

மதுரை - நாமக்கல் (சேர்கார் - ரூ.845) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,575)

மதுரை - சேலம் (சேர்கார் - ரூ.935) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,760)

மதுரை - கே ஆர் புரம் (சேர்கார் - ரூ.1,555) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ2,835)

மதுரை - பெங்களூர் (சேர்கார் - ரூ.1,575) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ. 2,865) என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அப்புறம் என்ன இனி வந்தே பாரத்துல பயணிக்கவேண்டியதன்