நடைபயணத்தில் இணைந்தார் பிரியங்கா காந்தி.

“நாம் இணைந்து நடக்கும்போது, நாம் அடியெடுத்து வைப்பது வலிமையாக இருக்கும்”

நடைபயணத்தில் இணைந்தார் பிரியங்கா காந்தி.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்தார்.

ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை, நேற்றிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைந்தது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திதரை தொடங்கிஇதுவரை பிரியங்கா காந்தி அவருடன் பங்கேற்கவில்லை.
 முதல்முறையாக இன்று ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பிரியங்கா காந்தியும் பங்கேற்று இணைந்து நடந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்துக்குள் ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை நேற்று நுழைந்துத.  இன்று காலை காந்தவா மாவட்டம், போர்கவோன் நகரிலிருந்து ராகுல் காந்தி நடைபயணத்தைத் தொடங்கினார்.

அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரின் கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரேஹன் ஆகியோரும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இணைந்து நடந்தனர்.

 ராகுல் காந்தியுடன், இணைந்து பிரியங்கா காந்தியும் நடந்ததைப் பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆரவாரம் செய்து கோஷம் எழுப்பினர். இருவரையும் அருகே சென்று பார்க்க காங்கிரஸ் தொண்டர்கள் முயன்றனர் ஆனால், போலீஸார் தடுத்துவிட்டனர்.
 
இன்று காலை போர்கோவன் நகரில் இருந்து ராகுல் காந்தி நடைபயணத்தைத் தொடங்கியபோது மிகவும் குறைவான அளவில்தான் தொண்டர்கள் வந்திருந்தார்கள். ஆனால், நேரம் செல்லச் செல்ல ஏராளமான தொண்டர்கவந்து நடைபயணத்தில் பங்கேற்றனர். 

ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் ராகுல் காந்தி,  பிரியங்கா காந்தியுடன் இணைந்து நடந்தார். ராகுல் காந்தி செல்லும் நடைபயணம் டிசம்பர் 4ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் முடிகிறது, அதன்பின் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்துக்குள் அடியெடுத்து வைக்கிறது.

ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் இணைந்து நடந்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் “நாம் இணைந்து நடக்கும்போது, நாம் அடியெடுத்து வைப்பது வலிமையாக இருக்கும்”எனத் தெரிவித்துள்ளது.