தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றம்

பக்தர்கள் தரிசனம் கோலாகல கொண்டாட்டம்

தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றம்

பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததுமான தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்


பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தலமான தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப்பெருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்

இதையொட்டி இன்று அதிகாலையில் காசிவிசுவநாதர் ஆலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் 16 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீவாதாரணை நடத்தி வேத மந்திரங்கள் வழங்க கொடியேற்றப்பட்டது.

திருவிழா வருகிற மார்ச் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனையும், இரவு 8 மணிக்கு கட்டளை தீபாராதனையும், அதைத்தொடர்ந்து சுவாமி - அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மார்ச் 5-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது இதில் சுவாமி, அம்பாள் ஆகிய 2 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. தினமும் வெவ்வேறு சமுதாயம் சார்பில் கட்டளை பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இவ் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்து வருகின்றனர்..