மிளகாய்க்கு புவிசார் குறியீடு: விவசாயிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆட்சியர் பெருமிதம்

குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடுகிடைத்திருப்பது ராமநாதபுரம் மாவட்ட விவசா யிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்தார்

மிளகாய்க்கு புவிசார் குறியீடு: விவசாயிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆட்சியர் பெருமிதம்

பசுமைப் புரட்சியில் ஓர் மகத்தான சாதனையாக இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு பொருளுக்கும்
மண்ணின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் பொருளின் சிறப்பிற்கு ஏற்ப புவிசார் குறியீடு
வழங்கப்பட்டு வரும் நிலை இருந்து வந்தது. அதனடிப்படையில் தமிழகத்தில் 43 பொருட்களுக்கு
புவிசார் குறியீடு பெற்று அந்தந்த பொருள்களின் பெருமை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்று வந்தது.

அதனடிப்படையில் நடப்பாண்டில் வேலூர் மாவட்டத்தில் விளையும் ஊதா, பிங்க் மற்றும் பச்சை நிறம் கலந்த கத்தரிக்காய் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் விளையக்கூடிய குண்டு மிளகாய் என இரண்டு உற்பத்தி பொருள்களுக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில் இதற்கான (GI Tag) புவிசார் குறியீடு வழங்க ஒப்புதலுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

தற்பொழுது இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையக்கூடிய குண்டு மிளகாய் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றது என்பது மாவட்டத்திற்கு கிடைத்த மிக பெருமையான ஒன்றாகும். தற்பொழுது குண்டு மிளகாய் உற்பத்தி தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருவதும் இதற்கான ஒரு சான்று ஆகும். இங்கு விளையக்கூடிய குண்டு மிளகாய் அதிக காரத்தன்மையும், சுவையும் கொண்டுள்ளதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 200 ஆண்டு காலமாக உற்பத்தி செய்யும் குண்டு மிளகாய்க்காண அங்கீகாரம் கிடைத்ததன் மூலம் விவசாயிகளுக்கான அங்கீகாரம் சிறந்து விளங்குகின்றது. இங்கு விளையக்கூடிய குண்டு மிளகாய் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவது மட்டுமின்றி கத்தார், ஓமன், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்திற்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.