மீன்பிடி தடைக்காலம் துவக்கம்: இனிமேல் மீன் விலை விர்ர்...

மீன்பிடி தடைக்காலம் துவக்கம்: இனிமேல் மீன் விலை விர்ர்...

மீன்பிடி தடைக்காலம் துவக்கம்: இனிமேல் மீன் விலை விர்ர்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் இன்று(ஏப்ரல் 15) முதல் துவங்கியது. இதனால் இனி வரு காலங்களில் மீன் விலை அதிகரிக்கும்.

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல் 15ம் தேதி துவங்கி, ஜூன் 14ம் தேதி வரை, 61 நாள்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு, கோடை காலமான இன்று ஏப்., 15 முதல் ஜூன் 14 வரை, 61 நாட்கள் விசைப்படகுகள் மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம், இன்று நள்ளிரவு 12 மணி முதல் துவங்கியது.

புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இனி வரு காலங்களில் மீன் விலை அதிகரிக்கும்.

வங்கக் கடல், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில், இந்த நாட்களில் விசைப் படகுகள் மீன் பிடிக்க அனுமதியில்லை.

இன்று முதல் தடை காலம் துவங்குவதால், நேற்று மீனவர்கள் படகில் இருந்த மீன் பிடி வலைகள், பேட்டரிகள், தளவாட பொருட்களை வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

குமரி - சென்னை வரை சுமார் 8 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

நாகையில் 27 மீனவ கிராமங்களில் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.