வறுமை வாசிப்பு

வறுமை வாசிப்பு
ns krishana

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை சந்திக்க ஒருவர் வந்தார். "ஐயா நான் நன்றாக நாதஸ்வரம் வாசிப்பேன்" என்றார். "அப்படியா சரி. இப்போதே வாசி பார்க்கலாம்..." என்று வாசிக்கச் சொன்னார் கலைவாணர். அவரும் வாசித்தார்...

ஆனால் வாசிப்பில் சுருதி, தாளம், ராகம் எதுவுமே சரியாக அமையவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் கலைவாணர் நாதஸ்வரம் வாசித்தவரை அருகில் அழைத்து கைநிறைய பணம் கொடுத்தனுப்பினார்...

அவர் சென்றபின் உடனிருந்தவர்கள், "அவர்தான் சரியாக வாசிக்கவிலையே.. அப்புறம் ஏன் அவருக்கு அவ்வளவு பணம் கொடுத்தீர்கள்" என்றபோது ... "அவர் நாதஸ்வரம் வாசிக்கவில்லை.. தன் வறுமையைதான் என்னிடம் வாசித்துக் காட்டினார் அவர்... அது எனக்கும் வாசித்த அவருக்கும் மட்டும்தான் தெரியும்..." என்றார் கலைவாணர்...