தென்புலத்தார் வழிபாடு

இறந்த முன்னோர்களுக்கு மாதம் தோறும் வரும் அமாவாசையில் விரதமிருந்து தர்ப்பணம் செய்யாதவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் கண்டிப்பாக விரதமிருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்விரதம் தந்தையை இழந்தவர்கள் கடைபிடிக்கும் விரதமாகும்

தென்புலத்தார் வழிபாடு
aadi ammavasai

தேவகணங்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக உத்தராய னமும், பித்ருக்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக தட்சிணா யனமும் திகழும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றில் தட்சிணா யன புண்ணிய காலத்தில் வருவது ஆடி அமாவாசை.

ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பையும் முக்கியத்துவம் பெறும்.

நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், எள்ளும் தண்ணீரும் அளிப்பதால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது. பித்ருக்களை நினைத்து நாம் செய்யும் தர்ப்பண பூஜைகள் நமக்குப் பொருளையும், ஆயுளையும், சுவர்க்கப் பேறு முதலான சுப பலன்களையும் கொடுக்கும். பகைவர்களை ஓடச்செய்து, நமது குலத்தைத் தழைத்தோங்கச் செய்யும்.

முன்னோர் ஆராதனைக்கு உகந்த நாள் அமாவாசை. சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை. இதை முழுமைப் பெற்ற நாள் என்பார்கள் பெரியோர்கள். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள் என்பது சிறப்பு. ஆக, இந்த நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம். அதிலும் குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசைகள்... தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன

சிறப்பான அமாவாசை வகைகள்
அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு கிளம்பும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக, அவர்களௌக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக காடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆடி அமாவாசை விரத முறை:
பொதுவாக பெற்றோர் இல்லாதோர் அமாவாசை அன்று விரதமிருந்து காக்கைக்கு உணவு வைத்து பின்னர் சாப்பிடுவது வழக்கம்.