பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வாழ்க்கை

na muthukumar birth day

பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வாழ்க்கை
na muthukumar

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் நா.முத்துக்குமார் பிறந்தார். தன்னுடைய 4வது வயதில் இவரது தாயை இழந்தார். அப்போதிலிருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார்.

இயக்குனராக வேண்டும் என்ற முனைப்பில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் உதவியாளராகவே பணியாற்றினார். அதன் பிறகு சீமான இயக்கித்தில் வெளிவந்த வீரநடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

அதன் பிறகு போக்கிரி, அழகிய தமிழ் மகன், சந்திரமுகி, நந்தா, வாரணம் ஆயிரம் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் இவரது படைப்புகளுக்கு பிலிம்பேர் விருது, தேசிய விருது உள்பட பல விருதுகள் கிடைத்துள்ளது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட பாடல்கள் படைத்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை படைத்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த கிரீடம் படத்திற்கு வசன கர்த்தாவாகவும் இருந்துள்ளார்.

பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாமல், சில கவிதை தொகுப்புகளையும் படைத்துள்ளார். நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன், ஆணா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால கண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் முதலிய படைப்புகளை படைத்துள்ளார்.

தங்கமீன்கள் படத்தின் ஆனந்த யாழை மீட்டுகிறாள் மற்றும் சைவம் படத்தின் அழகே அழகே என்ற பாடலுக்கு இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு ஜீவலட்சுமியை மணந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.

41 வயதை நிரம்பிய இவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் இன்று காலமானார். இவரது இழப்பு திரையுலகினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து, பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ், சீமான், அதர்வா உள்பட பலர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நா.முத்துக்குமார் ( பாடலாசிரியர் ) பற்றி சில வரிகள் 

* பட்டாம்பூச்சி விற்பவன். 

* நியுட்டனின் மூன்றாம் விதி. 

* குழந்தைகள் நிறைந்த வீடு. 

* அனா ஆவன்னா. 

* என்னை சந்திக்க கனவில் வராதே.