இந்திய வானிலை ஆய்வுத் துறையில் அறிவியல் உதவியாளர் தேர்வு
இந்திய வானிலை ஆய்வுத் துறையில் அறிவியல் உதவியாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய வானிலை ஆய்வுத் துறையில் அறிவியல் உதவியாளர் தேர்வு 2022க்கான அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் 30.09.2022 அன்று வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கான நியமனத்திற்கு போட்டித் தேர்வை இந்த ஆணையம் நடத்தவுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
பதவியின் விவரம், வயது வரம்பு, தேவைப்படும் கல்வித்தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வு கால அட்டவணை, எவ்வாறு விண்ணப்பம் செய்வது போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்புக்கான அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆணையத்தின் www.ssc.nic.in என்ற இணைய தளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 18.10.2022 (23:00) இணையம் வழியாக தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 20.10.2022 (23:00).
தென் மண்டலத்தில் ஆந்திர பிரதேசத்தில் 10 மையங்கள், தமிழ்நாட்டில் 7 மையங்கள், தெலங்கானாவில் 3 மையங்கள் என மொத்தம் 20 மையங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு 2022 டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.
பணியாளர் தேர்வாணைய தென் மண்டல இயக்குனர் திரு கே நாகராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.