தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரெயில் முன்பதிவு

தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்க்கும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்புவர். அவர்கள் பஸ், ரெயில் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரெயில் முன்பதிவு

தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கான

ரெயில் முன்பதிவு ஜூலை 12ம் தேதி துவங்குகிறது என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் வரும் 12ம் தேதி தொடங்கும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.