ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கின்ற கழிவுகள்

தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கின்ற கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிக்கான ஆய்வுகள் தொடங்கின.

ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கின்ற கழிவுகள்

தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும்  ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கின்ற கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிக்கான ஆய்வுகள் தொடங்கின.


 ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேதாந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தின் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்  நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சித் தலைவர் அமைத்திருந்தார்.

 இன்று ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான உள்ளூர் மேலாண்மை குழுவில் தொழிற்சாலை இணை இயக்குனர் சரவணன், மாவட்ட துணை தீயணைப்பு துறை அதிகாரி ராஜு, மாநகராட்சி அதிகாரி ரங்கநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரி ஹேமந்த்,  தூத்துக்குடி மாவட்ட ரூரல் டிஎஸ்பி சுரேஷ் உட்பட அலுவலர்கள் ஆலைக்குள் சென்றுள்ளனர்.

இந்த குழுவினர் ஆய்வு செய்யும்  நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
 இந்த ஆய்வை தொடர்ந்து கழிவறை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும்.

இந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கை காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். சிசிடிவி கேமரா மூலமாக சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்படும். ஆலையில் 24 மணி நேரம் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும்.

இது குறித்த அறிக்கை ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆட்சியரிடம் விரிவான அறிக்கை இந்த குழுவினர் அளிப்பார்கள்.