ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும்

அவரவர் தசைகளும் யோகங்களும் நிச்சயமாக ஒரு பலனை தர கூடியது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய  தசைகளும்
மேச லக்னத்திற்கு 
குருதசை 30 வயதில் ,அதாவது நல்ல சம்பாதிக்கற வயதில் வருமாயின் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். குரு,ஆட்சி, உச்சம்,திக்பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில்
சனி,ராகு,கேது,புதன் ,செவ்வாய் போன்ற கிரகங்களில் தொடர்பின்றி சுபத்தன்மை அடைந்திருந்தால் அவருடைய தசையில் பேரும் புகழும், அதிர்ஷ்டமும், செல்வாக்கும், பதவி,புகழ், அந்தஸ்து, நல்ல குழந்தை பாக்கியங்களும், தன பிராப்தங்களும்,ஆன்மீகத்தின் மூலமாக உயர்வு,பணம் , கோயிலுக்கு பக்கத்தில் தொழில் என்று உச்சத்துக்கு செல்ல வைப்பார்.
 
ரிஷப லக்கனத்திற்கு சனி ஒருவனே மேலான ராஜயோகத்தை தருவார். சனி ஒருவரே ராஜயோகாதிபதி.சனி தர்ம கர்மாதிபதி. சனி தசையை தொடர்ந்து புதன் தசையும் இவர்களுக்கு தொடர்ந்து வருவது ஒரு வரப்பிரசாதமான ஒரு அமைப்பு. ரிஷப லக்ன அன்பர்களுக்கு சனி புதன்,சுக்கிரனுடன் இணைந்து சுபத்தன்மை அடைந்து நல்ல இடங்களில் அமைந்து 30 வயதுக்கு அருகில் தசை வரும் போது வாழ்க்கையில் சகலவிதமான பாக்கியங்களையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. ரிஷப லக்கனத்திற்கு சனி ஒருவன் மட்டுமே நன்றாக இருந்தால் போதும் அவர் வாழ்க்கையில் ஓரளவு நல்ல நிலைக்கு வரமுடியும்.
 
மிதுனம் லக்னத்திற்கு ராகு ஒருவரே நல்ல யோகத்தை தருவார்.. மிதுனம் லக்னத்திற்கு ராகு நல்ல இடங்களில் அமைந்து ,சனி,புதன், சுக்கிரன் தொடர்புகளை பெற்று சுபத்தன்மை அடையும் போது ராகு தசை மேலான ராஜயோகத்தை தரும்.
 
கடக லக்னத்திற்கு செவ்வாய் ராஜயோகாதிபதி.இவருடைய தசை 30 வயதுகளில் வரும் போது  இவருடைய தசையில் மேலான ராஜயோகத்தை தருகிறது. அதற்கு செவ்வாய் குரு,சந்திரன், சூரியனின் தொடர்புகளை பெற்று சுபத்தன்மை அடைந்து இருக்க வேண்டும். இந்த லக்னதாரர்களுக்கு செவ்வாய் ஒருவன் மட்டும் நன்றாக இருந்தால் மட்டுமே போதுமானது. வாழ்க்கை ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்து விடும். ஒரேயொரு ஆதிபத்தியம் மட்டுமே வாங்கும் சந்திரன் வளர்பிறை சந்திரனாகி பட்சபலம் உள்ளவராக இருந்தால் சந்திர தசை,மற்றும் செவ்வாய் தசை மொத்தம் 17 வருடங்கள் புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். ஆனால் 30 வயதுக்கு மேல இந்த தசைகள் வர்றோனும்.
 
சிம்ம லக்னத்திற்கு லக்னாதிபதியை தவிர வேறு எவருமே ராஜயோகாதிபதிகள் இல்லை. சூரிய தசை இவர்களுக்கு ராஜயோகத்தை தரும். இவர் ஒரே ஒரு ஆதிபத்தியம் வாங்குகிறார். வேறு பாவ ஆதிபத்தியம் இல்லை.  சூரியன் மேலும் நன்மைகளை தரவேண்டும் என்றால் ஆவணிமாதம், மாசிமாதம்,வைகாசி மாதம் பிறந்தவராக இருந்து குரு ,பௌர்ணமி சந்திரன் சந்திரன்,புதன் இவர்களின் இணைவு சேர்க்கையை பெற்று இவருடைய தசை இளமையில் (25 வயதுக்கு அருகில்) அரசியல், அரசாங்க வேலை,தலைமை பண்பு, நிர்வாக திறமை  போன்ற விசயங்கங்களில் புகழின் உச்சிக்கு செல்ல வைப்பார்.
 
சந்திரன் விரையாதிபத்தியம் பெற்று விடுவதால் இவருடைய தசை இளமையில் வந்து இவர் அதிகமான சுபத்தன்மை அடையும் போது வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க வைப்பார்.இப்ப உதாரணமாக சிம்ம லக்னம்.ராசி தனுசு. குரு சிம்மத்தில் இருந்து ராசியை பார்க்க ,லக்னம் ராசியோடு குரு சம்பந்தப்பட்டு ,அந்த சந்திரனை மிதுனத்தில் இருந்து புதனும், சுக்கிரனும் நோக்க சந்திரதசையில் அந்த நபர் மாதம் ஐந்து லட்சம் சம்பளமாக அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்.
 
சிம்ம லக்னத்திற்கு குரு பஞ்சமாதிபத்தியத்தோடு அட்டமாதிபத்தியம் பெற்று விடுகிறார். அதனால் அவர் அரை யோகர்தான்.குருபகவான் சிம்மத்தில் இருந்து பஞ்சம ஸ்தானமான தன்னுடைய வீட்டை தொடர்புகொள்ளும்போது இவருடைய தசை நடைமுறையில் இருந்தால் பூர்வ புண்ணியத்தின் பலனாக புகழின் உச்சிக்கு செல்ல வைப்பார். ஆனாலும் அவருடைய  தசை முப்பது வயது சுமாருக்கு வரவேண்டும். எழுபது வயதுகளில் வந்தால் ப்ரயோசனம் இல்லை.
 
கன்னி லக்னத்திற்கு சுக்கிரன் ஒருவரே மேலான ராஜயோகத்தை தருவார். இழருடைய தசை முப்பது வயதுகளில் வந்தால்  மேலான ராஜயோகத்தை தரும். இவர் லக்னத்திற்கு 4,7,9,10 போன்ற இடங்களில் அமைந்து புதனுடன் சேர்க்கை பெற்று தசையை நடத்தினால் 
அடேயப்பா என்ன ஒரு அற்புதமான அமைப்பு. நவகிரகங்களில் இவருக்கு மட்டுமே அதிகபட்சமாக 20 வருடங்கள் தசை வருடங்களாக அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களே  மாபெறும்.அதிர்ஷ்டசாலிகள்
 
துலாம்
 
துலாம் லக்னத்திற்கு சனிதசை முப்பது வயதுகளில் வருமேயானால் அவரே பெரிய அதிர்ஷ்டசாலி.சனி உச்ச வக்கிரம் பெற்று லக்னத்தில் இருந்து புதன், சுக்கிரன், சந்திரன் தொடர்புகளைப் பெறும் போது அவர்கள் லட்சக்கணக்கான சம்பாத்தியங்களை அடைகிறார்கள்.பூர்வ புண்ணியத்தின் பலனாக  இவர்கள் லட்சக்கணக்கான சம்பாத்தியம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு இவைகளை அடைந்து சமுதாயத்தில் பெரும் மதிப்பு மரியாதை யோடு திகழ்கின்றனர் .
 
சனி துலாத்துக்கு ஒரு கேந்திரம் மற்றும் இன்னொரு திரிகோணாதிபத்தியம் பெறுவதால் அதுவும் முக்கியமான சுகாதிபத்தியம் மற்றும் பஞ்சமாதிபத்தியம் பெறுவதால் சனி ஒருவனே மிக மேலான ராஜயோகாதிபதி.இவர் ஒருவர் மட்டுமே நன்றாக இருந்தால் போதும்.மற்ற எட்டு கிரகங்களும் கெட்டு போனாலும் கூட சனி ஒருவர் மட்டுமே நன்றாக இருந்தால் இவர்கள் வாழ்க்கை ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்து விடுகிறார்கள்.இவர்கள்  "குன்றின்  மேலிட்ட விளக்கு" போன்றவர்கள் இவர்கள்.
 
இவர்களுக்கு அதற்கு அடுத்த திசையாக புதன் தசை வருவது பெரிய கொடுப்பினை யாதும்.சனி, புதன், பௌர்ணமி சந்திரன் அல்லது பௌர்ணமி கற்கும் அருகில் உள்ள பட்சபலம் உள்ள சந்திரன் , சுக்கிரன் இவர்களின் தொடர்புகளை பெறும் போது சொந்த தொழில் செய்து, ஆளடிமை வைத்து பேரும் புகழையும் அடைய முடியும்.இதே அமைப்பு நல்ல இடங்களில் குறிப்பாக ஏழில் அமைந்தால் ஏழில் சனி திக்பலம் பெற்று சுபத்தன்மை அடையும் போது கோடீஸ்வரனாக வே வாழ முடியும்.
இதற்கு லக்னாதிபதி யின் வலிமை ரொம்ப ரொம்ப முக்கியம்.
 
விருச்சிகத்திற்கு குருதசை யோகத்தை தரும் என்றாலும் சூரியன் மட்டுமே முழுமுதல் யோகாதிபதி யாக வருவார்.
குரு துதியாதிபத்திய தோசத்தை அடைவார் என்றாலும் அவரே பஞ்சமாதிபதி என்பதால் கொல்ல மாட்டார்.
 
சூரியன்  பொதுபாவர் என்பதால் அவர் ஏதாவது ஒரு சுபகிரகத்தின் சம்பந்தத்தை பெற வேண்டும் என்ற விதிப்படி அவர் பௌர்ணமி சந்திரனின் பார்வையில் இருப்பது மிகப்பெரிய யோகமான தர்மகர்மாதிபதி யோகத்தை தருவதால் ஜாதகனை மிகப்பெரிய அந்தஸ்துக்கு உயர்த்தும்.
 
அதேபோல சூரியன்,  கடகத்திலும்,சந்திரன்  சிம்மத்திலும் மாறி அமர்ந்து பரிவர்த்தனை யோகம் பெற்று இருந்து இவர்களின் தசை நல்ல சம்பாதிக்கிற வயசுல வந்தால் சூரியன், சந்திரன் என இருவரின் தசையுமே மிகப்பெரிய யோகத்தை தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.இதில இருவருக்கும் ஆட்சி பலம் கிடைப்பது மட்டும் அல்லாமல் உச்ச யோகமான முதல் தர யோகமான பரிவர்த்தனை யோகம் கிடைத்து வாழ்க்கையில் உச்சத்துக்கு கொண்டு செல்லும்.  
 
அமாவாசை யோகம் கூட இந்த விருச்சிக லக்னத்திற்கு நல்ல யோகத்தை தருகிறது.ஆனால் இருவரில் ஒருவர் நீசம் பெற்று விடக்கூடாது.இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்று அமாவாசை யோகமாக இருப்பது,ஜாதகனுக்கு ஒரு 27 வயதுக்கு பிறகு அரசு வேலை கிடைத்து புகழின் உச்சிக்கு செல்வார்.சூரியனுக்கு குரு பார்வையும் சிறப்பைத் தரும்.
 
தனுசு லக்னத்திற்கு பாக்கியாதிபதியான சூரியன் ,புதனுடன், அல்லது குருவுடன் இணைந்து  மிகப்பெரிய ராஜயோகத்தை தருகிறது.
ஒரு கிரகம் தனித்து இருப்பதை விட இன்னொரு கிரகத்தோடு இணைந்திருப்பது யோகம்.யோகம் என்ற சொல்லுக்கு இணைவு அல்லது சேர்க்கை என்று பொருள்.
 
மகர லக்னத்திற்கு சுக்கிரன் ஒருவனே ராஜயோகாதிபதி.மகர லக்னத்திற்கு சுக்கிரன் தசை முப்பது வயதுகளில் வருபவர்கள் மாபெரும் அதிர்ஷ்டசாலி கள். ஆனால் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்று விடக்கூடாது.ராகுவுடன் இணைந்து கிரகணம் பெற்று விடக்கூடாது.தனித்த சுக்கிரனாக இருப்பது அல்லது புதனுடன் இணைவது மட்டுமே நன்மை பயக்கும்.சூரியனுடன் இணைவது யோகத்தை கெடுக்கும்.சூரியன் மகர லக்னத்திற்கு அட்டமாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது ‌.குருவோடு இணைவது கூட யோகத்தை கெடுக்கும்.
குரு மகர லக்கினத்தில் நீசம் அடைவார் என்பதால் நீசனோடு சேரும் சுக்கிரன் தனது பலத்தை இழப்பார்..
 
கும்ப லக்னத்திற்கு எந்த கிரகமுமே முழு அளவு யோகத்தை தருவதில்லை.லக்னாதிபதியே விரையாதிபத்தியம் பெற்று விடுகிறார்.
குருவுக்கு கேந்திர,திரிகோணாதிபத்தியங்கள் இல்லை.செவ்வாயே திருதீய ஸ்தானமான மாரகாதிபதியாகிறார்.
புதன் அட்டமாதிபத்தியம் பெற்று அரை யோகர் என்ற அமைப்பில் அவரும் மாரகாதிபதி என்ற அமைப்பை பெற்று விடுகிறார்.
 
கும்ப லக்னம் ஸ்திர லக்னம் என்ற அமைப்பில் வரும்.ஸ்திரத்திற்கு 3,8 மாரக ஸ்தானங்களாக வரும். புதனும் யோகரில்லை.சுக்கிரன் பாதகாதிபதி என்ற அமைப்பை பெற்று அவரும் பாதகாதிபத்தியம் பெற்று விடுவதால்
அவரும் முழு யோகர் கிடையாது.
சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து ஒன்பது, பத்தில் இருந்தால் இருவரின் தசைகளும் நன்மை பயக்கும்.
 
இந்த கும்ப லக்னத்தில் எந்த ஒரு கிரகமுமே உச்சமோ,நீசமோ அடைவது இல்லை.அதனால் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மேலான ராஜயோகத்தை அடைய முடிவதில்லை என்பதே உண்மை யாகும்.இந்த கும்ப லக்னம் பன்னிரண்டு ராசிகளிலே கடைத்தர வலிமை உடையது.
 
மீனம் லக்னத்திற்கு சந்திரன் தசையே மேலான ராஜயோகத்தை தருகிறது.
சந்திரன் பஞ்சமாதிபதி.. அவருக்கு ஒரே ஒரு ஆதிபத்தியம்.வேறு பாவ ஆதிபத்தியம் இல்லாத காரணத்தால் அவர் தசை பத்துவருடங்கள் ராஜயோகத்தை தரும்.ஆனால் சந்திரனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்று இரட்டை நிலைகள் இருப்பதை யாரும் மறந்து விடக்கூடாது.வளர்பிறை சந்திரன் மட்டுமே முழுயோகத்தை தருவார்.
 
 சந்திரன் தசை,செவ்வாய் தசை என முப்பது வயதுகளில் ஆரம்பிப்பது பெரிய கொடுப்பினை என்றே சொல்ல வேண்டும்.செவ்வாய் வளர்பிறை சந்திரனோடு இணைந்து  அல்லது குருவோடு இணையும் போது சந்திர மங்கள யோகம் ,குரு மங்கள யோகம் போன்ற யோகங்கள் கிடைக்கப்பெற்று அவர் தசை வரும் போது வீடு, சொத்து, பூமி என்று பூமி யோகங்களை தருகிறது.
 
மீன் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழிலே புண்ணிய தொழிலாக அமைந்துவிடுகிறது என்ன காரணம்??
இந்த லக்னத்திற்கு குருவே லக்னத்திற்கும் , பத்தாம் இடத்துக்கும் ஆதிபத்தியம் பெறுவதால்,ஒரே சமயத்தில் லக்னம் மற்றும் பத்தாமிடத்தோடு  தொடர்பு கொள்கிறது.
லக்னாதிபதியே பத்தாம் இடத்திற்கும் ஆதிபத்தியம் பெறுவது கன்னி மற்றும் மீனம் லக்னத்திற்கு பொருந்தும். ஆசிரியர்,ப்ரபொசர் , டியூடர், ஸ்கூல், கல்வி நிறுவனங்கள் , பேங்க், ரிசர்வ் பேங்க் , ஆன்மீகம் , அறநிலையத்துறை போன்ற இடங்களில் இவர்களுக்கு தொழில் அமைப்புகளை ஏற்படுத்தி தருகிறது
 
 
நன்றி:
 
"பாரம்பரிய"
ஜோதிடர்
விஸ்வநாதன் S
பாப்பம்பட்டி
பழனி தாலுகா
திண்டுக்கல் மாவட்டம்
8248771464
9543630377