தீபாவளி பரிசு: 10 லட்சம் பேருக்கு திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

இந்த ஆய்வின் போது, மத்திய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு

தீபாவளி பரிசு: 10 லட்சம் பேருக்கு திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
modi

Rozgar Mela recruitment drive for 10 lakh personnel:  அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேரை விரைந்து பணியமர்த்துவற்கான  துவக்க நடவடிக்கையாக சிறப்பு முகாமினை  (Rozgar Mela) பிரதமர் மோடி வரும் தீபாவளி யன்று தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் உரையாற்ற உள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மத்திய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதனடிப்படையில், அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் (Mission Mode Recruitment) மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அப்போது  அறிவுறுத்தினார் . அதன் தொடர்ச்சியாக வரும் தீபாவளி பண்டிகையின் போது, சிறப்பு பணி நியமனங்கள் தொடர்பான முகமாமினை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.