இராமநாதபுரத்தில் புத்தக திருவிழா தொடங்கியது..

புத்தகதிருவிழா இராஜா மைதானத்தில் தொடங்கியது

இராமநாதபுரத்தில் புத்தக திருவிழா தொடங்கியது..

"முகவை சங்கமம் - புத்தகம் வாசிப்போம் புதுமையாய் யோசிப்போம்"
இராம நாத புரத்தில் 5 வது புத்தக திருவிழா2023 இன்று கோலாகலமாக இராஜா மேல்நிலை பள்ளி மைதானத்தில் தொடங்கியது.


இராமநாதபுரத்தில் முகவை சங்கமம் மாவட்ட நிருவாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் 5 வது புத்தக திருவிழா2023 இன்று தொடங்கியது.


பள்ளி மாணவமாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கிய புத்தகதிருவிழாவில்
மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வரவேற்பு வழங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம்வர்கீஸ் மற்றும்  இராம நாத புர சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் புத்தக கண்காட்சி அரங்கை திறந்துவைத்து பார்வையிட்டனர்.
இவ் கண்காட்சியில் பள்ளிகல்விதுறை,வேளாண்துறை மருத்துவ துறை ஆகியவற்றின் சார்பாக அரங்குகள் அமைக்க பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பாக செய்தி தொடர்புத்துறை சார்பாக அரசின் சாதனை விளக்க கண்காட்சி யும் அமைக்க பட்டு இருக்கிறது.
100க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஏராளமான புத்தகங்களை பல்வேறு பள்ளிகளை சேருந்த  1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பார்வைவிட்ட இக்கண்காட்சி பிப்19 வரை நடைபெற உள்ளது.தினம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடை பெற உள்ளன.