ராணி எலிசபெத் குறித்து அதிகம் அறியப்படாத மற்றும் வேடிக்கையான உண்மைகள்
கடந்த 21 ஏப்ரல் 1926ம் ஆண்டு மூத்த மகளாக எலிசபெத் 2ம் ராணி பிறந்தார்
25 வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார்.
கிங் 6ம் ஜார்ஜ் மற்றும் மகாராணி எலிசபெத் ஆகியோருக்கு கடந்த 21 ஏப்ரல் 1926ம் ஆண்டு மூத்த மகளாக எலிசபெத் 2ம் ராணி பிறந்தார்.
பிரிட்டனின் மகாராணியாக தனது 25வது வயதில் 1952ஆம் ஆண்டு பதவியேற்றார். தனது 70 ஆண்டுகளாக ஆட்சியில் இதுவரை 15 பிரிட்டன் பிரதமர்களை அவர் பார்த்துள்ளார்.
தனது ஆட்சி காலத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அவர் எதிர்கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைவு காரணமாக எலிசபேத் 2ம் ராணி பொது நிகழ்வுகளில் அதிகளவு பங்கேற்காமல் இருந்து வந்துள்ளார்.
தனது ஆட்சி காலத்தில் பிரிட்டனின் 15 பிரதமர்களை அவர் கண்டுள்ளார். இந்நிலையில், ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கியிருந்த 96 வயதான பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் அனைவரையும் அவசரமாக வரும்படி செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, ர். ராணியின் குடும்பத்தினர் அனைவரும் பால்மாரல் அரண்மனைக்கு விரைந்தனர்.
இந்நிலையில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ராணி எலிசபெத் காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத் அலெக்சான்ட்ரா மேரி. அவர் பிறந்தபோது இங்கிலாந்தை அவரது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் ஆண்டு கொண்டிருந்தார். இவரது தந்தை பெயர் ஆறாம் ஜார்ஜ். தாய் பெயர் எலிசபெத். இதனால் இவர் இரண்டாம் எலிசபெத் ராணி என அழைக்கப்பட்டார். அவரது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் 1936-ல் மரணமடைந்தபோது மன்னராக மூத்த மகன் எட்டாம் எட்வர்டு அரியணை ஏறினார். ஆனால் குறுகிய காலத்திலேயே தன்னுடைய காதலுக்காக மன்னர் பதவியைத் துறந்தார். அதைத் தொடர்ந்து எலிசபெத்தின் தந்தையான ஆல்பர்ட் ஆறாம் ஜார்ஜ் என்ற பெயருடன் மன்னரானதும் 10 வயதில் பட்டத்து இளவரசி ஆனார் எலிசபெத்.
இளவரசி எலிசபெத் தனக்கு 17 வயதாக இருந்தபோது, அவர் இளவரசர் பிலிப்ஸ் மீது காதல் வயப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 9, 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் மகாராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்ஸ் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 20, 1947 ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எலிசபெத் மற்றும் பிலிப்ஸ் திருமணம் செய்து கொண்டனர்.பக்கிங்ஹாம் அரண்மனையில் இருவரும் திருமணத்திற்குப் பின் பொதுமக்களுக்கு காட்சியளித்தனர். ஏப்ரல் 26, 1949 ஆம் ஆண்டு இளவரசி எலிசபெத் மற்றும் பிலிப்ஸ் ஆகியோருக்கு முதல் குழந்தையாக சார்லஸ் பிறந்தார்.
1952 ஆம் ஆண்டில் தந்தை மறைந்ததும் இங்கிலாந்தின் ராணியாக முடிசூடினார் இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து ராணியின் சிறப்பு அந்தஸ்துகள் ராணி மீது எந்த வழக்கும் பதிய முடியாது. உலகில் எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் அவர் சென்று வரலாம், அதற்கு பாஸ்போர்ட்டு தேவையில்லை.
இங்கிலாந்தில் அவர் கார் ஒட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. அவர் போக்குவரத்து விதிகளை மீறினாலும் தண்டிக்க முடியாது. ஆனாலும் இதுவரை எந்த சர்ச்சையிலும் அவர் சிக்கியதில்லை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இன்று வரை உயிர்ப்போடு வைத்திருப்பது மட்டுமல்ல சமூக மாற்றத்திற்கான முன்னோடியாகவும் இருந்துள்ளார்.
மன்னர் ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வந்தவர். குறிப்பாக அரச குடும்பத்திற்கும், அரண்மனைக்கும் தேவையான செலவினங்களை இங்கிலாந்து மக்களின் வரி பணத்திலிருந்து வழங்கும் முறையை 2012- ஆம் ஆண்டு மாற்றினார். கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பிரதமர்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்த நாட்டிற்கான நிரந்தர அதிபர் ராணி எலிசபெத் தான்.
எந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் அதிகாரம் இருந்தாலும் இதுவரை போர் தொடுக்க விரும்பியதில்லை. பிரிட்டனில் இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தபின் இதுவரை 13 அமெரிக்க ஜனாதிபதிகள் மாறியிருக்கிறார்கள்.
எலிசபெத் ராணியின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலருக்கும் மேல் இருக்கும் . பிரிட்டீஷ் அரசு குடும்பத்திற்கு ஆண்டுதேறும் செலுத்தப்படும் இறையாண்மை கிராண்ட் எனப்படும் வரி செலுத்துவோர் மூலம் ராணிக்கு வருமானம் கிடைக்கும். இது பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும்.
இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இரண்டு பிறந்த நாள்கள் இருந்தன - ஏப்ரல் 21 அன்று அவரது உண்மையான பிறந்த நாள், அது தனிப்பட்ட முறையில் நடைபெற்றது, மேலும் ஜூன் மாதம் இரண்டாவது செவ்வாய் அன்று அதிகாரப்பூர்வ பொதுக் கொண்டாட்டம், கோடை காலநிலை வெளிப்புற அணிவகுப்புகளுக்கு சிறப்பாக இருக்கும். அதேபோல்,இனி பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இரண்டு பிறந்தநாட்களை கொண்டாடுவார். நவம்பர் 14 அன்று சார்லஸின் பிறந்தநாள் குளிர்காலத்தின் தொடக்கத்தில் இருப்பதால், வெப்பமான மாதத்தில் அவருக்கு "அதிகாரப்பூர்வ பிறந்தநாளும்" இருக்கும். பிரித்தானிய மன்னர் வாக்களிப்பதில்லை,
தேர்தலில் நிற்க முடியாது. அரச தலைவர் என்ற முறையில், அவர் அரசியல் விவகாரங்களில் கண்டிப்பாக நடுநிலையாக இருக்க வேண்டும். பாராளுமன்ற அமர்வுகளை முறையாகத் திறப்பது, பாராளுமன்றத்தில் இருந்து சட்டத்தை அங்கீகரிப்பது மற்றும் பிரதமருடன் வாராந்திர சந்திப்புகளை நடத்துவது போன்றவற்றில் அவர்கள் ஈடுபடவேண்டும். இங்கிலாந்தின் ராணி, அல்லது அந்த நேரத்தில் அரியணையில் அமர்ந்திருப்பவர் 5300 ஜோடி அன்ன பறவைகளுக்குச் சொந்தமானவர்.
லண்டன் தேம்ஸ் நிதியில் இதைப் பார்க்க முடியும். ஒரு அன்ன பறவை முட்டை 300 டாலர் அளவில் மதிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தின் நீர் எல்லைகளுக்குள் உள்ள அனைத்து திறந்த நீர் மீன்வளத்தையும் ராணி சொந்தமாக வைத்திருக்கிறார். இதில் ஸ்டர்ஜன், திமிங்கலங்கள், போர்போயிஸ் மற்றும் டால்பின்கள் ஆகியவை அந்த நேரத்தில் அதிகாரப்பூர்வமாக ராணி அல்லது மன்னருக்கு சொந்தமானவை எனச் சட்டம் உள்ளது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும், பிரிட்டன் மன்னருக்கு வசனங்களை இயற்றும் பரிசு பெறும் ஒரு கவிஞரை நியமிக்கிறது. 17-ஆம் நூற்றாண்திலிருந்து இந்த பாரம்பரியம் வருகிறது. மன்னருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்து வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் இந்த உத்தரவு ஒரு பெரிய மரியாதையாகும், இது அவர்களது விற்பனைக்கு ஊக்கமளிக்கிறது. வாரண்ட் வழங்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களில் அரச ஆயுதங்களைப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய தனியார் கலைத் தொகுப்பின் உரிமையாளராக விளங்குகிறார் ராணி எலிசபெத். அரசு குடும்பத்திடம் தற்போது சுமார் 10 லட்சம் ஓவியங்கள், வாட்டர்கலர்கள், வரைபடங்கள் உள்ளன. ராணி எலிசபெத் தலைமையிலான பிரிட்டன் அரசு குடும்பம் சுமார் 60 லட்சம் ஏக்கர் நிலத்தை வைத்துள்ளது. இந்த நிலத்தின் மொத்த விலையைத் துல்லியமாக நிர்ணயிக்க முடிந்து என்பதால் தோராயமாக 33 டிரில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. 830,000 சதுர அடி தளம் மற்றும் 775 அறைகள் கொண்ட பக்கிங்ஹாம் அரண்மனை இன்றும் உலகின் மிகப்பெரிய தனிநபர் வீடாகா கருதப்படுகிறது. இது பிரிட்டின் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இந்த அரண்மனை சுமார் 20,000 ஏக்கர் பசுமையான வயல்களாலும் காடுகளாலும் சூழப்பட்டுள்ளது. இந்த வீடு 1771 இல் கட்டிடக் கலைஞர் கார்னிஷ் ஹென்லி என்பவரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் 19 அரசு அறைகள், 188 பணியாளர்கள் படுக்கையறைகள், 78 குளியலறைகள், 52 அரச விருந்தினர் அறைகள் மற்றும் 92 அலுவலகங்கள், அற்புதமான ஓவியங்கள் மற்றும் தனித்துவமான கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட முக்கிய அறைகள் உள்ளன.
எலிசபெத் ராணியின் பிரத்யேக சேகரிப்புகளில் 1984 ஜாகுவார் டெய்ம்லர் டபுள் சிக்ஸ் லாங்-வீல்பேஸ் சலூன் காரும் அடங்கும், இது குறிப்பாக 1984 ஆம் ஆண்டில் அவரது வின்ட்சர் தோட்டங்களைச் சுற்றவும், ராணி ஓட்டுவதற்காகத் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ராயல் வின்ட்சர் குதிரை கண்காட்சியின் போது ராணி எலிசபெத் அவரே ஓட்டிக் கொண்டிருந்த கார் இதுவாகும், மேலும் பானட்டில் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட கோர்கி சிலை உள்ளது. இந்த ரேஞ்ச் ரோவர் கார் இரட்டை டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 இன்ஜின், 4 வீல் டிரைவ், 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் எஸ்யுவி(SUV) காராகும். இதன் விலை 400,000 டாலர். நகை சேகரிப்பு பெண்கள் என்றால் நகை மீது அதிகப்படியான ஆசை இருக்கும், இதுவும் உலகிலேயே பணம் பலம், ஆட்சி பலம் அதிகம் கொண்ட ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத்-யிடம் பல மில்லியன் டாலர் மதிப்பிலான நகைகள் உள்ளது.
ரன்னி டயாரா (றRanny's Tiara) கிரீடம் புகழ்பெற்ற கிரீட நகைகளைக் கொண்ட இந்தச் சேகரிப்பில் அவரது அரச கிரீடம் "தி கேர்ள்ஸ் ஆப் கிரேட் பிரிட்டன் தலைப்பாகை" அடங்கும், இது ராணியின் மிகவும் விலையுயர்ந்த சொத்துக்களில் ஒன்றாகும். இந்த இணைப்பில் 22.48 காரட் கொண்ட தனித்துவமான துளி வடிவ வைர நெக்லஸ், தென்னாப்பிரிக்க நெக்லஸ் மற்றும் வளையல், வைர காதணிகள், 200 ஆண்டுகளுக்கும் மேலான ரத்தினக் கற்கள், 23.6 காரட் வெட்டப்படாத டான்சானியாவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கருப்பு நிற ஸ்னஃ பாக்ஸ் மற்றும் மார்வெல் பாக்ஸ் ஆகியவை அடங்கும். எலிதபெத் ராணிக்கு வழங்கப்பட்ட சில முக்கியமான பரிசுகளில் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள விளாடமிர் தலைப்பாகை, 4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இளவரசர் ஆல்பர்ட் சபையர் puரூச் மற்றும் கிட்டத்தட்ட 50 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள குல்லினன் நகைகள் ஆகியவை அடங்கும். உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரங்களுள் ஒன்று கோகினூர் வைரம். இது இந்தியாவிற்குச் சொந்தமானது.
ஆனால் இங்கு இல்லை. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு எலிசபெத் ராணியின் கிரீடத்தில் இந்த வைரம் இருக்கிறது. 1849 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவிடம் அளிக்கப்பட்டது. இந்த வைரத்திற்கு இந்தியா உள்பட 4 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. தற்போது அந்தக் கிரீடம் லண்டன் டவரில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகைகள் அனைத்தும் பக்கிங்ஹாம் அரண்மனையின் ஒரு பகுதியில் பாதுகாப்பான நிலத்தடி லாக்ரில் வைக்கப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.