வீட்டில் காலியாகவே கூடாது!
இந்த ஐந்து பொருள் வீட்டில் காலியாகவே கூடாது! பண கஷ்டம் வரும், தீடீர் வறுமை ஏற்படும்
இன்றைய நாட்களில் யாருக்குத்தான் பணக்கஷ்டம் இல்லை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு மதிப்புமிக்க பொருள் தான் பணம். இப்படி இருக்கும் பட்சத்தில் நாமை வாழ்க்கையை சமாளிக்க சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் உங்கள் வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் குறைந்து காலியாகிவிட்டால் உங்களுக்கு மிகப்பெரிய பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம் அது என்னென்ன பொருட்கள் என்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
உப்பு
முதல் பொருளாக உப்பு உங்கள் வீட்டில் வைத்திருக்கும் உப்பு எப்பொழுதுமே முழுமையாக காலியாக விடக்கூடாது. அப்படி உப்பு சுத்தமாக இல்லாமல் காலியாகி விட்டால் உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம் அதனால் வீட்டை நிர்வாகிக்கும் பெண்கள் எப்பொழுதுமே ஒரு பாக்கெட் உப்பு வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்வது நல்லது.
மஞ்சள், குங்குமம்
இரண்டாவது மற்றும் மூன்றாவதாக நாம் பார்க்க போவது மஞ்சள், குங்குமம் உங்கள் வீட்டில் எப்பொழுதும் மஞ்சள் குங்குமம் இல்லை என்ற வார்த்தையை வரக்கூடாது. ஆம், மஞ்சள் குங்குமம் முழுமையாக காலியாகும் நிலை வந்தாலும் உங்களுக்கு பெரிய பண கஷ்டம் வரப்போகிறது என்றுதான் அர்த்தம். அதனால் மஞ்சள் குங்குமம் காலியாவதற்கு முன்பே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.நான்காவதாக அனைவரின் பசியை போக்கும் அரிசி எப்பொழுதும் வீட்டில் காலியாகி விடக்கூடாது. ஏன் அடுத்த நாள் உணவுக்காக அரிசி இல்லை என்ற வார்த்தை உங்களிடமிருந்து வரக்கூடாது அந்த அளவிற்குஅரசி காலியாவதற்கு முன்பாகவே நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் அரிசி காலி ஆகிவிட்டாலும் உங்களுக்கு பெரிய பணம் கஷ்டம் வர கூடும்.
பெண்ணின் சந்தோஷம்கடைசியாக நாம் நாம் பார்க்க இருக்கிற விஷயம் மிகவும் முக்கியமானது நம் வீட்டு பெண்களின் சந்தோசம். எந்த ஒரு வீட்டில் ஒரு பெண் சந்தோஷமாக இல்லாமல் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாலோ அந்த வீட்டிலும் சந்தோஷம் துளியும் இருக்காது. அதனுடன் லட்சுமி கடாட்சமும் இருக்காது லட்சுமி கடாட்சம் இல்லாத வீட்டில் காசு பணங்கள் சேராது. அதனால் ஒரு பெண் எப்பொழுதும் வீட்டில் சிரிப்புடன் சந்தோஷமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.