சுவையான பச்சைப் பயறு கார தோசை!
தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி..
பச்சைப் பயறு கார தோசை
தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - 2 கப், காய்ந்த மிளகாய் - 7, மல்லி (தனியா), சோம்பு, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 4 பல் நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பயறை 6 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றுடன் பூண்டு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), சோம்பு, மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, வெங்காயத்தை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும்.
குறிப்பு: கடலை எண்ணெய் ஊற்றி தோசை செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்