சுவையான சிவப்பு அவல் புட்டு

சுவையான சிவப்பு அவல் புட்டு எப்படி செய்வது

சுவையான சிவப்பு அவல் புட்டு

தேவையான பொருள்கள் -

சிவப்பு அவல் - 1 கப்
சீனி - 1/2 கப்
தண்ணீர்  - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை 
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து அவலை லேசாக வறுத்துக்கொள்ளவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அவலோடு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். பிறகு அதோடு தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து நன்றாக கலந்து  அதோடு தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
.
அதன் பிறகு இந்த கலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். .
வெந்ததும் ஒரு பாத்திரத்தில் புட்டுடன்   சீனியை சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.