ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்க ரயில்வே முடிவு
டிச24-டிச 29 இடையே ரயில் பயணம்
மதுரையில் இருந்து ஷீரடி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு டிச., 24 - டிச., 29 வரை ஆன்மிக சுற்றுலா ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி மதுரையிலிருந்து டிச., 24ல் புறப்படும் இந்த சுற்றுலா ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக முதலில் பண்டரிபுரம் செல்கிறது.
டிச., 25ல் பண்டரிபுரம் பாண்டுரங்கன் தரிசனம், டிச., 27ல் ஷீரடி சாய்பாபா தரிசனம், டிச., 29ல் மந்திராலயம் ராகவேந்திரர் தரிசனம் முடித்து மதுரை வந்து சேரும்.
பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து போன்றவை உள்ளடக்கி குறைந்த கட்டணத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இதற்கான டிக்கெட்டை www.ularail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு 73058 58585 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.