​​ரொம்ப ருசியான போஸ்னியா பூரி

​​ரொம்ப ருசியான போஸ்னியா பூரி

 
கொல்கத்தா ஸ்பெஷல்:

தேவையானவை :

கோதுமை மாவு - 400 கிராம், காய்ச்சிய பால் -200மிலி, ஆக்டிவ் டிரை ஈஸ்ட் - 1 tbs, ஆயில் - 100 மிலி (மாவு பிசைய), முட்டை - 1, சர்க்கரை - 1 tbs, ஆயில் - பூரி பொரிக்கும் தேவைக்கு, உப்பு - தேவைக்கு.

செய்முறை :

ஒரு பெரிய பவுலில் பாலை ஊற்றி அதில் ஈஸ்ட் & சர்க்கரை கலந்து முட்டை கலக்குவது போல நுரை வரக்கலந்து அதை 10 - 12 நிமிடங்கள் அப்படியே வைத்துவிடவும். பிறகு இதை ஒரு முறை நன்கு கலந்து விட்டு இதில் கோதுமை மாவை கொட்டிப் பிசையவும். பிசையும் போதே உப்பு போட்டு..

பிசைந்து பிறகு 50 மிலி ஆயில் சேர்த்து பிசையவும், அவ்வப்போது நீர் தேவைப்பட்டால் நீரை தெளித்து பிசையவும்! ஓரளவு மாவைப் பிசைந்ததும் முட்டையை உடைத்து மாவில் ஊற்றி பிசையவும்! இதன் பிறகும் நீர் தேவையெனில் தெளித்து பிசையவும்! கலவை தளர்ந்தால் சிறிது கோதுமை மாவும் சேர்த்துக் கொள்ளவும்!

மாவு நன்கு மென்மையாக பிசைந்து வந்ததும் மொத்த மாவின் மீதும் 2 ஸ்பூன் ஆயில் விட்டு மாவு முழுவதும் தடவி ஒரு துணி போட்டு பவுலை மூடி குறைந்தது 1 மணி நேரம் வைத்துவிடவும்! 1 மணி நேரம் கடந்த பின்பு துணியை திறந்தால் மாவு பொங்கி கையால் அழுத்த குஷன் போல உள்ளே செல்லும் பதத்திலிருக்கும்

மொத்த மாவையும் வட்டமாக தட்டி மேலிருந்து நான்காக மடித்து உருட்டி நீளமான பைப் ஷேப்பில் வைத்து அதை சப்பாத்தி உருண்டை அளவு துண்டாக கட் செய்யவும் 400கிராம் மாவில் 8 முதல் 9 துண்டுகள் வரவேண்டும். ஆயில் தொட்டுக் கொண்டு இந்த மாவினை பூரிக்கட்டையில் வட்டமாக தேய்க்கவும்!

அடுப்பில் வாணலியில் ஆயில் ஊற்றி அது சூடானதும் பூரியை இருபுறமும் சிவந்து வர பொரித்து எடுக்கவும்! ஆயில் நல்ல வெப்பத்தில் இருக்கணும். வெல்வெட் குஷன் போல பஃபியான போஸ்னியா பூரி தயார்! இதை சைவ அசைவ குருமாக்களுடன் பரிமாறவும். இலவம் பஞ்சு போல இந்த பூரி அவ்வளவு மிருதுவாகவும் கிரிஸ்பியாகவும் இருக்கும்!

{ஆக்டிவ் டிரை ஈஸ்ட் கிடைக்காவிட்டால் பேக்கிங் சோடா பயன்படுத்தவும்}