கோபக்கார மனைவியை சிரிக்க வைக்க டிப்ஸ்

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் அழகானது

கோபக்கார மனைவியை சிரிக்க வைக்க  டிப்ஸ்
husbend-wife

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் அழகானது, மென்மையானது. இந்த உறவில் காதல், நட்பு, சச்சரவுகள் எல்லாம் இருக்கும். நல்ல உறவுக்கு இவையெல்லாம் அவசியம். ஆனால் என்ன நடந்தாலும், கணவன் மனைவிக்குள் சண்டை சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் அது நீண்ட காலம் நீடித்தால், உறவுக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் கணவன்-மனைவி இடையே உணர்ச்சிபூர்வமான பிணைப்பு மிகவும் முக்கியமானது.

திருமணமான எல்லா ஆண்களுக்கும் தெரியும், கோபத்தில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதற்காக பல பகீரத முயற்சிகளைக் கூட செய்வார்கள். 

கோபத்துக்கான பின்னணி என்பதை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் மனைவியின் மனக்கசப்புக்கான காரணம் உங்களுக்குத் தெரியாவிட்டாலும், முதலில் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.ஒரு நல்ல கணவனின் முதல் வேலையே மனைவி ஏன் கோபப்படுகிறாள் என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தனியாக இருக்கும்போது உங்கள் மனைவியுடன் பேசுங்கள். அவள் சொல்வதைக் கேளுங்கள். நிச்சயம் கோபத்துக்கான காரணம் தெரியவரும். 

மனைவி மிகவும் கோபமாக இருந்தால், அவளை அமைதிப்படுத்த நேரம் கொடுங்கள். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில், வீடு மற்றும் அலுவலகம் இரண்டையும் நிர்வகிப்பதில் ஏற்படும் மன அழுத்தம் சில சமயங்களில் மனைவியை கோபப்படுத்தலாம். அவளுடைய கேள்விகளுக்கு கோபத்துடன் உடனடியாக பதிலளித்தால், விஷயம் மோசமாகிவிடும். எனவே அவளை அமைதிப்படுத்த நேரம் கொடுங்கள்.

பூக்கள் மற்றும் சர்பிரைஸான பரிசுகளை விரும்புகிறார்கள். அதனால், மனைவி கோபமாக இருந்தால், பரிசுகளை கொடுத்து சமாதானப்படுத்த முயலலாம். அலுவலகம் முடிந்து திரும்பும் போது மனைவிக்கு அழகான பூங்கொத்து வாங்கி வாருங்கள். அது உங்கள் மனைவியின் கோபத்தை தணிக்கும். சிறிய பயணத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். இது பிரச்சனையின் திசை இல்லாமல் போக வழிவகுக்கும். 

பிடித்த பொருளை அழைத்துச் சென்று வாங்கித் தருகிறீர்கள் என்றால், சமாதானம் சமிக்கைகள் பறந்து வரும். இருவருக்கும் இடையே மகிழ்ச்சி தாண்டவமாடும்.கோபத்தை தணிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு போதுமான நேரத்தைக் கொடுத்து, ஆசுவாசமாகிவிட்டார்களா? என பார்த்தபிறகு மெதுவாக பேச்சுக் கொடுங்கள்.