ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் ஏன்?

ராம நாம ஜெபத்தால் ஆஞ்சநேயர் தன் உள்ளம் உருகுகிறார்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்  ஏன்?
hanuman

வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராம நாம ஜெபத்தால் ஆஞ்சநேயரும் தன் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும்.

போர்க்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார்.

இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.

போர்க்களத்தில் மூர்க்க குணம் கொண்ட அரக்கர்களை, தமது உடல் வலிமையால் வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர்.

அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து, அவருக்கு வடை மாலை செய்து சாத்துகின்றனர்.