அவர் ஒதுங்கச் சொன்னாரே... ஏன் கேட்கவில்லை”

“உலகில் அனைத்தும் நாராயணன் தான், இந்த உண்மையை மறவாதே”

அவர் ஒதுங்கச் சொன்னாரே... ஏன் கேட்கவில்லை”
(elephant


சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் ராமகிருஷ்ணர். குருகுலத்தில் குருநாதர் ஒருநாள், “உலகில் அனைத்தும் நாராயணன் தான், இந்த உண்மையை மறவாதே” என்று சீடர்களுக்கு உபதேசம் செய்தார். அதை பின்பற்ற நினைத்த சீடன் ஒருவன், எளிய மண் புழுவில் இருந்து ஆறறிவு கொண்ட மனிதன் வரை அனைத்தையும் நாராயணராக பார்த்தான்.
ஒருமுறை நகரம் ஒன்றுக்குச் சென்ற போது, பலர் ஓடுவதைக் கண்டான். சிலர் “பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடி ஒளிந்து கொள். இல்லாவிட்டால் சிக்கிக் கொள்வாய்” என்றார் ஒருவர்.
“யானையிலும் நாராயணர் தான் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார்'' என்ற நம்பிக்கையுடன் நடந்தான்.
எதிரில் யானை பிளிறியபடி வந்தது. விலகிப் போகுமாறு பாகன் குரல் கொடுத்தான். பொருட்படுத்தாத சீடனை, யானை துாக்கி வீசியது. உயிர் தப்பியது பெரும்பாடானது. காயம் ஆறிய பின் ஒருநாள் குருநாதரைக் காணச் சென்றான். “எல்லா உயிர்களும் நாராயணர் என கூறினீரே, எனக்கு ஏன் கொடுமை நேர்ந்தது? யானையில் வந்த நாராயணர் என்னை ஏன் தண்டித்தார்?” எனக் கேட்டான்.
“யானையாக வந்ததும், பாகனாக வந்ததும் நாராயணர் தான். அவர் ஒதுங்கச் சொன்னாரே... ஏன் கேட்கவில்லை” எனக் கேட்டார். அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
'தீயவர்களிடம் இருந்து விலகுவதே நல்லது' என்னும் நீதியை வலியுறுத்தி உபதேசத்தை முடித்தார் ராமகிருஷ்ணர்.
“நல்லவர்களிடமும், தீயவர்களிடமும் பரம்பொருளான நாராயணர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். மீறினால் துன்பம் ஏற்படும்” என்றார் ராமகிருஷ்ணர்.