மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பி.விக்காஸ் தங்கப் பதக்கம்
மதுரை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பி.விக்காஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் swimming சார்பில் தேசிய அளவில் பல்கலைக்கழக மாணவ - மாணவியருக்கான நீச்சல் போட்டி மே 26 முதல் 29 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை நீச்சல் வீரர் பி.விக்காஸ் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதில் 50 மீ ஃப்ரிஸ்டைல் பிரிவில் 23.47 வினாடிகளில் நீந்தி தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல், 100 மீ ப்ரிஸ்டைல் பிரிவில் 52.78 வினாடிகள் நீந்தி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தேசிய அளவில் தங்கம் வென்று பெருமை சேர்த்த வீரர் பி.விக்காஸூக்கு, தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.ராஜா, மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் என்.கண்ணன் மற்றும் நீச்சல் வீரர்கள் பாராட்டினர்.