ஒருவரி செய்திகள்
இன்று மாநிலத்தில் நடந்த நிகழ்வுகள்
1) புதுச்சேரியில் வரும் 4ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை.
புயல் எச்சரிக்கையை முன்னிட்டு, வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.
ஏற்கனவே பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
___
2) மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 13 மணி நேரமாக நடைபெற்ற தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு.
லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நடைபெற்ற இச்சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்
__
3) காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்தது.
வங்கக் கடலில் மணிக்கு 11கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 9 கி.மீ-ஆக குறைந்தது.
சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே 630 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 740 கி.மீ தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது -இந்திய வானிலை ஆய்வு மையம்.
___
4) இந்தியா 84வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி
சர்வதேச செஸ் ரேட்டிங்கில் 2500 புள்ளிகளை கடந்து வைஷாலி அபாரம்
இந்திய அளவில் 3வது பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்
இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர், 3வது மகளிர் கிராண்ட் மாஸ்டர் உள்ளிட்ட பெருமைகளை பெற்றார் வைஷாலி
கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது
___
5) தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு தடை விதித்த போலீசார்
__.
6) தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து 47,320 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,915ஆக உயர்ந்தது.
___
7)ஆதித்யா எல்1 - இஸ்ரோ புதிய அப்டேட்
ஆதித்யா எல் 1 விண்கலத்தில் சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் (SWIS) என்ற கருவி செயல்பட தொடங்கியது - இஸ்ரோ
ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது எனவும் தகவல்
___
8)
2024 JEE Main நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க டிச.4 கடைசி.
2024-ஆம் ஆண்டு JEE Main நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதி நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், தேர்வுக் கட்டணம் செலுத்தவும் டிசம்பர் 4-ஆம் தேதி கடைசி நாள்.
___
9) அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி பணம் பறித்தது பற்றி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் FIRல் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள்.
அரசு மருத்துவர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது சேவையை களங்கப்படுத்திவிடுவதாக
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்.
லஞ்சம் தராவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரசு மருத்துவரை மிரட்டியுள்ளார்.
உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தில் பங்கு தர வேண்டும் எனக் கூறி திண்டுக்கல் மருத்துவரை மிரட்டியுள்ளார் அங்கித் திவார்.
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர்.
திண்டுக்கல் அரசு மருத்துவர் லஞ்சப் பணத்தை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது மணல் குவாரியில் இருப்பதாக அங்கித் திவாரி கூறியுள்ளார்.
ஏற்கனவே பல பேரை மிரட்டி பணம் பறித்துள்ளதால், மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் லஞ்ச பேரம் பேசினாரா என விசாரிக்க முடிவு.
லஞ்ச பணத்தை ஹவாலா பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மூலம் கொடுத்தனுப்ப முடியுமா என அங்கித் திவாரி மருத்துவரிடம் கேட்டுள்ளார்.