திருமணத்திற்கு இதுதான் தடையாக இருக்குமா..?
திருமணத்தடைக்கு செய்வாய் தோசம் காரணமாக இருப்பினும் இந்த பரிகாரங்களை செய்வதால்..
கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்
ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.
அந்த வகையில் லக்கினம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு, இரண்டாவது இடம், நான்காவது இடம், ஏழாவது இடம், எட்டாவது இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் எனப்படும்.
மேற்கண்ட 2, 4, 7, 8, 12 என ஐந்து இடங்களில் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது பாமரர்களுக்கும் தெரிய வந்ததால் இன்று ஏழைகளும் சுகமாக வாழ செவ்வாயின் அருள் அவசியம் என்பது புரியும். மேலும் 2, 4, 7, 8, 12-ல் பாபக்கிரகங்கள் இருந்தாலும் இதே நிலைதான். இருந்தாலும் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை.
மேலும் சூரியன், குரு, சனி ஆகியோருடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலே தோஷம் இல்லை. இதே நேரத்தில் செவ்வாய் தோஷ அமைப்பு ஆண் பெண் இரு பாலருக்கும் இருந்தால் தோஷம் இல்லை. மேலும் பல காரணங்கள் தோஷம் இல்லை என்பதை புரிந்து அப்படியும் தோஷம் இருந்தால் அதற்கு எளிய பரிகாரம் உள்ளது.
மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.
சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
2 - இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும்.
பலன் தரும் பரிகாரங்கள்:
துவரை தானம்:
உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
வாழைப்பூத் தானம்:
முழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.
வழிபாட்டு முறை:
செவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடைïறுகளும் இதனால் விளைவதுண்டு.
கோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும்.
இந்த தோஷத்தைத் தன்னிடத்தில் இருந்து விலக்கி கொண்டு விட்டால் இத்தகு தொல்லைகள் வராது. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மௌனம் இருக்க வேண்டும்.
இந்த மௌனம் இருக்க முடியாத படி எத்தனையோ தடங்கல்கள் வரும். தடங்கல்களைத் தோணியாக்கிக் கொண்டு மேலும் அதிலேயே பயணம் செய்யக் கூடாது. தடங்கல்களை எதிர்த்து நின்று மௌனத்தைக் கடைப்பிடிப்பவன் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவான்.
செவ்வாய் தோஷக் காரர்கள் முருகப் பெருமானையும், வளம் தரும் வயிரவக் கடவுளையும் விடாது வழிபட வேண்டும். காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது. முருகன் கோலங்கள் பலவாக இருந்தாலும் தண்டபாணியாக விளங்கும் கோலம் செவ்வாய்க்குச் சிறப்பு.
வயிரவ வடிவங்கள் வெகுவாக இருந்தாலும் க்ஷத்ரபாலர் என்ற அவதூத வடிவம் சிறப்பானது. முருகனையும் க்ஷத்ர பாலனையும் அன்றாடம் தோத்திரங்களாலும் அர்ச்ச னைகளாலும் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார் விஜய்சுவாமிஜி.
பரிகார காலம்:
செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.
பொதுவாகவே செவ்வாய்தோஷம் விசயத்தில் ஜாதகத்தை,நன்றாக ஆராய்ந்து இணப்ப்தே சிற்ப்பாகும்,அப்படி ஆராய்ந்து இணைக்காவிடில் திருமண வாழ்வு பாதிக்கும் என்பது உண்மை.