சூரிய சக்தி மின்சார கிராமம் பெருமிதத்துடன் பிரதமர் மோடி

மோதேரா கிராமத்தில் உள்ள சூரிய கோவில் பிரசித்தி பெற்றது. இப்போது, சூரிய சக்தி மின்சாரத்தில் இந்த கிராமம் கவனம் பெற்றுள்ளது

சூரிய சக்தி மின்சார கிராமம் பெருமிதத்துடன் பிரதமர் மோடி
pm

பாரத பிரதமர் மோடி அவர்கள் பல திட்டங்களை நாட்டிற்கு கொண்டுவரும் நிலையில் குஜராத்தின் மோதேரா கிராமத்தை, 24 மணி நேரமும் சூரிய சக்தியில் இயங்கும் நாட்டின் முதல் கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் வந்துள்ளார்.

இந்த பயணத்தின் போது, 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் துவக்கி வைக்க உள்ளார்.


இம்மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:

ஜாதி மற்றும் அரசியல் பின்புலத்தையும் தாண்டி குஜராத் மக்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

மோதேரா கிராமத்தில் உள்ள சூரிய கோவில் பிரசித்தி பெற்றது. இப்போது, சூரிய சக்தி மின்சாரத்தில் இந்த கிராமம் கவனம் பெற்றுள்ளது.

நாட்டிலேயே, 24 மணி நேரமும் சூரிய சக்தியில் இயங்கும் முதல் கிராமம் என்ற பெருமையை மோதேரா பெற்றுஉள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.மோதேரா கிராமத்தில் உள்ள வீடுகள், அரசு அலுவலக கட்டடங்கள் உட்பட, 1,300க்கும் மேற்பட்ட சூரிய சக்தி மின்சார தகடுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம் நாட்டில் சூரிய ஒளி நிறைந்த கிராமம் என்ற பெருமை அடைந்துள்ளது


குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது கூடுதல் தகவல்.