மதுரை கார்த்திகை தீப திருவிழா!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பெருவிழா கொடியேற்றம்

மதுரை கார்த்திகை தீப திருவிழா!
Meenakshi temple

தென் நாடு உடைய சிவனே, போற்றி! 
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

ஆடக மதுரை அரசே போற்றி!
கூடல் இலங்கு குருமணி போற்றி!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை அன்று  (டிசம்பர் 01.12.22) - காலை 10.30மணிமுதல் 10.55 மணிக்குள்ளாக மகர லக்னத்தில் கார்த்திகை உற்சவம்1ம் திருநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது .அன்றிலிருந்து தீப திருநாள் வரை தினமும் காலை மாலையில் பஞ்சமூர்த்திகள் ஆடி வீதி புறப்பாடு நடைபெறுகிறது டிசம்பர் ,6ல், திருக்கார்த்திகையன்று ஆலயம்  முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படுகிறது
அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்கிறார்கள். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கிரீடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைவரும் தவறாது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஆலவாய்  மீனாட்சி சுந்தரேசுவரர்  திருவருளை பெறுக