வாழ்க்கைக்கும் வயசுக்கும் சம்பந்தமே இல்லைன்றதுக்கு நிறைய உதாரணம் இருக்கு. 50 வயசுக்கு மேலதான் நிறைய பேருக்கு வாழ்க்கையே ஆரமிக்குது. வாய்ப்பும் அப்படிதான் வாழ்க்கை பூரா நம்ம கூடவே பயணம் பண்ணும் எங்கயாது நமக்கான இடம் வரும். இதுக்கு சினிமாவை வைச்சே நிறைய உதாரணம் சொல்லலாம்.
பாடகர் மாணிக்க விநாயகம் இருந்தார்ல அவர் தில் படத்துல பாடகரா வாழ்க்கை தொடங்கறப்ப 60வயசு நெருங்குறப்பதான். எல்லாரும் ரிட்டையர்ட்மெண்ட் வாங்கி ஓய்வு எடுக்கற வயசுலதான் அவரு பாடவும் நடிக்கவும் ஆரமிக்கிறாரு. அவருக்காகவே அமைஞ்ச பாட்டு 60ஆகிடுச்சு மணிவிழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடிதான்.60 வயசுக்கு மேலதான் நடிப்பு பாட்டுனு அவளோ பிசியாருந்தாரு..
அதே மாதிரி ஆரம்பத்துல இயக்குனரா இருந்து பின்னர் நடிகராகி ஒரு சில படங்கள் செஞ்சிருந்தாலும் நட்புகாக படத்துக்கு அப்புறம் காமெடி நடிகரா ஒரு ரீஎன்ட்ரி குடுத்து விவேக், வடிவேலு சந்தானம் னு எப்ப டாப் கியர் எடுத்துச்சுனே தெரியாம அம்பது வயசுக்கு மேலதான் மனோபாலா டாப்கியர் எடுத்தாரு. சில வருஷங்களுக்கு முன்ன வந்த எந்த தமிழ் சினிமாவ பாத்தாலும் மனோபாலா இல்லாத படமே இருக்காது. வருஷத்துக்கு 25-30 படங்கள் குறையாம நடிச்சிருக்காரு நடிச்சிட்ருந்தாரு..
மனோபாலாக்கு அடுத்து அதே மாதிரி சில வருஷம் முன்ன இவர் இல்லாத தமிழ் சினிமாவே இல்லைனு சொல்லலாம்னா அது நான் கடவுள் ராஜேந்திரன்தான். ஒரு ஸ்டன்ட் கலைஞரா இருந்தவரு நான் கடவுள் வில்லன் செய்யறப்ப கிட்டதட்ட அவருக்கு 55 வயசு. வில்லனா நடிப்பு வாழ்கைய தொடங்கியவரு பாஸ் எ பாஸ்கரன் படத்துக்கப்பறம் தமிழ்சினிமாவோட முக்கியமான காமெடியனா மாறி சில வருஷங்கள்லயே அவளோ படங்கள் பண்ணிருக்காரு.
பிக்பாஸ் இத்தனை சீசன் நடந்துடுச்சு அவளோ பெரிய மேடை அதுல வாய்ப்பு கிடைச்சாலே போதும் அவளோ அங்கீகாரம் புகழ்னு வாழ்கையே மாற போகுதுனு கமல் லேந்து எல்லாரும் சொன்னாலும் அவளோ புகழடைஞ்ச ஓவியா வாழ்கை கூட மாறல.. ஆனா ஒரு சின்ன யூடியூப் சேனலால ரோட்ல சரக்கடிக்க போறவர கூப்ட்டு ப்ராங் ஷோன்ற முட்டாளாக்குற ஷோவுல வைச்சு அதிர்ஷ்ட்டம் மடார்னு அடிச்சது பிஜிலி ரமேஷ்க்கு. மீதி பேர் மாதிரி 50+ இல்லை 40+தான்னாலும் அவங்க வாழ்க்கை எப்ப தொடங்கும்ன்றதுக்கு உதாரணம்னா இவர் கதை எங்க தொடங்கும்ன்றதுக்கு உதாரணம். 2019 ல வந்த படங்கள்ல கோமாளி வரை அஞ்சாறு படத்துல நிறைய டீவி ஷோனு புகழ் வந்தது. அவர்க்குதான் தக்க வைச்சுக்க தெரியாம காணாம போய்ட்டாரு..
இன்னொரு உதாரணம் Gp முத்து. டிக்டாக்ல என்ன செய்யனே தெரியாம எதோ பண்ணிட்ருக்க ஊரே ட்ரோல் பண்ணிட்ருக்க டிக்டாக் தடைபண்ணவும் என்ன செய்யனு தெரியாம யூடியூப்ல அதே ரீல்ஸ ட்ரோல் பண்றவங்கள வைச்சே இவரு வளர்ந்தாரு சில படம் டீவி ஷோனு பயங்கர வளர்ச்சி. கிண்டல் பண்றவங்க அப்டியேதான் இருகாங்க.இவரோட மைனசே பிளஸ்ஸாகிடுச்சு. ரயில்ல பாடுனவர கண் தெரியாதவர கூட்டு இமான் பாடகராக்கினதுனு இத போல நிறைய உதாரணம் சொல்லிகிட்டே போகலாம்.
நம்ம எல்லாரோட வாழ்க்கையும் எந்த வயசுல வேணா எந்த இடத்துலனாலும் எப்ப வேணாலும் எந்த புள்ளில வேணாலும் தொடங்கலாம் காத்திருப்போம்...நம்பிக்கைதானே வாழ்க்கைனு சொல்லுவாங்கள்ல நம்புவோம்....