குலோப் ஜாமுன் செய்வது எப்படி???
இதோ சுவையான குலோப்ஜாமுன் தயார்.
தேவையான பொருட்கள்:
பால் - கால் படி
சர்க்கரை - ஒரு ஆழாக்கு
4 மைதாமாவு ஒரு கரண்டி
செய்முறை
பாலை ஒரு பாத்திரத்தில் கொட்டி தீயை குறைத்து வைத்து அடுப்பில் நன்றாக அடிப்பிடிக்காமல் கிளறவும்.
பால் கெட்டியாக ஆனவுடன் இறக்கி ஆற வைக்கவும்.
பின்னர் மைதாமாவை சலித்து சேர்த்து நன்றாகக் பிசைந்து சிறு உருண்டைகளாக (பெரிய உருண்டைகள் வேண்டாம் அப்புறம் நன்றாக பாகில் ஊறாது) உருட்டிக் கொள்ளவும்.
இப்போது சர்க்கரையை 2 கரண்டி நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இளம் பாகானவுடன் இறக்கி வைத்து விடவும்.
மறுபுறம், ஒரு வாணலியில் நெய்யைக் காய வைத்து உருண்டைகளைப் போட்டுச் சிவப்பாக பொரித்துப் பாகில் பதமாக போடவும் (ஏனெனில் போடும் சமயத்தில் உருண்டைகள் பிய்ந்து விடக் கூடாது)
நன்றாக ஊறிய பிறகு உபயோகப்படுத்தலாம்.
இதோ சுவையான குலோப்ஜாமுன் தயார்.