பனீர் வெஜ் மசாலா..
சுவையான பனீர் வெஜ் மசாலா

தேவையான பொருள்கள்
பனீர் - 150 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
தேங்காய் - 5 துண்டுகள்,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, தக்காளி - ஒன்று.,
பச்சைபட்டாணி - சிறிய கப்,
காரட் - பாதி,
காலிஃப்ளவர் - சிறிய துண்டு,
பீன்ஸ் - எட்டு,
கொத்தமல்லி - சிறிது,
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி,
மிளகாய்பொடி - ஒரு தேக்கரண்டி,
கரம்மசாலா - ஒரு மேசைக்கரண்டி,
பட்டை - ஒன்று,
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பனீர் வெஜ் மசாலா செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.காய்கறிகளையும் வெங்காயம், தக்காளியையும் சிறு நீளமாக வெட்டிக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறுசதுர துண்டுகளாக வெட்டவும்.ஒரு பேனில் எண்ணெய் விட்டு பட்டை போட்டு பனீரை போட்டு வதக்கவும்.அடுத்து வெங்காயத்தை ஒரு பக்கமாக போட்டு கேரட், பீன்ஸ் ஒரு பக்கமாக போட்டு வதக்கவும்.வதங்கிய வெங்காயத்தில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு விழுது போட்டு தக்காளி, பட்டாணி சேர்த்து வதக்கவும்.பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து கிளறி உப்பு, கரம் மசாலா சேர்த்து விட்டு மல்லி தழை தூவி வேக விடவும்..வெந்ததும் தேங்காயை அரைத்து பாலை எடுத்து அதில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து எண்ணெய் பிரிந்ததும் சிறிது கொத்தமல்லி தூவி இறக்கவும்.சப்பாத்தி, தோசையுடன் தொட்டு சாப்பிட சுவையான பனீர் வெஜ் மசாலா தயார். விரும்பிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.