சபரிமலை கோவில் அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி
அன்னதானமும் புண்ணிய பூங்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அன்னதானமும், புண்ணிய பூங்கா திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
சபரிமலை,
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தேவசம்போர்டு சார்பாக, ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தேவசம் போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அதேபோல் சபரிமலையை பிளாஸ்டிக் மற்றும் குப்பையில் இருந்து பாதுகாக்கும் வகையில், புண்ணிய பூங்காவனம் திட்டத்தையும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.