வேர்க்கடலை குல்பி

0
148

தேவை:

வறுத்த வேர்க்கடலைப் பொடி – ஒரு கப்,

பொடித்த பிஸ்தா, பாதாம் பருப்பு – தலா ஒரு ஸ்டீபூன்,
பால் – 2 லிட்டர்,
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கண்டன்ஸ்டு மில்க் – ஒரு கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்,
உடைத்த வேர்க்கடலை – சிறிதளவு,
ஒரு சிறிய மண்பானை – குல்பியை நிரப்ப.

செய்முறை:

அடிகனமான வாணலியில் பாலை ஊற்றி இரண்டு லிட்டர் பால் ஒரு லிட்டர் ஆகும்வரை காய்ச்சவும்.

அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து பாலுடன் பொடித்த பிஸ்தா, பாதாம் பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

பின்னர் இதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி, கூடவே வேர்க்கடலைப் பொடி, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கவும்.

பின்னர் கலவையை ஆறவைத்து மண்பானையில் ஊற்றி மேலே உடைத்த வேர்க்கடலையைச் சிறிது தூவவும்.

பானையை ஃப்ரீசரில் ஆறு முதல் எட்டு மணிநேரம் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.