இரவு 8 மணிக்கான செய்திகள்
காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி போலீசார் 6 மாதத்திற்குள் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
--------------------------------------
பன்னாட்டு மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள், வீராங்கனைகள்.
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
--------------------------------------
புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? -மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி.
4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் - நீதிபதி ஜோசப்.
கடந்த மே மாதம் காலியாக இருந்த தேர்தக் ஆணையர் பதவி, நவம்பர் 17-ல் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கிய பிறகு நிரப்பப்பட்டுள்ளது.
--------------------------------------
சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மேல்முறையீடு.
மனு மீது பதிலளிக்க தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரர் காதர் பாட்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
--------------------------------------
2001- 02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு.
செமஸ்டர் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
--------------------------------------
காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம்-காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவிப்பு.
--------------------------------------
ரேஷனில் பொருட்கள் வாங்காமலேயே, வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்படுவதாகப் புகார்.
போலி பில் போடும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை - கூட்டுறவுத்துறை எச்சரிக்கை.
--------------------------------------
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உத்தரவை ரத்து செய்ய கோரி யுவராஜ் உட்பட 10 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு.
--------------------------------------
தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்.19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல்.
--------------------------------------
நீலகிரியில் 191 இடங்களில் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
நீலகிரி மாவட்டத்தில் 191 இடங்களில் அந்நிய மரங்கள் அடையாளம் காணப்பட்டன - தமிழக அரசு.
53 இடங்களில் அந்நிய மரங்களை அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ளது, 16 இடங்களில் அந்நிய மரங்கள் அகற்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது - அரசு.
தமிழக வனப்பகுதியில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள்
4 வாரங்களில் டெண்டர் கோரி, அனைத்து இடங்களிலும் உள்ள அந்நிய மரங்களை முழுமையாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு
--------------------------------------
கள்ளக்குறிச்சி : தச்சூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து.
30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.
மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு.
--------------------------------------
வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை ரத்து செய்ய நேரிடும்- தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்திலேயே இயக்க வேண்டும்- தென்னக ரயில்வேக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறினால், கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை ரத்து செய்ய நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை
--------------------------------------