இரவு 7 மணிக்கான செய்தி சுருக்கம்

நவம்பர் 22 2022 இரவு 7 மணிக்கான செய்திச்சுருக்கம்

இரவு 7  மணிக்கான செய்தி சுருக்கம்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.27 லட்சத்தை தாண்டியது. 

பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,627,331 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

 உலகம் முழுவதும் கொரோனாவால் 643,314,367 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 622,514,437 பேர் குணமடைந்துள்ளனர்.

 மேலும் 36,124 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ககன்யான் திட்டத்தில் ரோபோக்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது"

விண்ணுக்கு அனுப்பும் சோதனை வெற்றி பெற்றால் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவர்

கன்னியாகுமரியில், இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

உண்மையை பேசினேன், அதனால் நீக்கப்பட்டு உள்ளேன் 

தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியவர்களுக்கு, நேரடியாக பதிலடி கொடுத்தேன்

என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை 

என்னால் பாஜகவிற்கு களங்கம் என சொல்வது வேதனை அளிக்கிறது - காயத்ரி ரகுராம்

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரும் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் யு.பி.பணாகர் உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள், டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.


பேராசிரியர் நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான வழக்கு 

வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் 

கல்வி நிலையங்கள் மீது நம்பகத்தன்மையை குறைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் - உயர்நீதிமன்றம்

மதுரையில் கடந்த மாதம் 30ம் தேதி பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வழக்கில், 4 பேர் மீது குண்டர் சட்டம்

இவ்வழக்கில் 10 பேர் கைதான நிலையில், சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். எட்டயபுரம் சாலையில் தனியார் மண்டபத்தில் 44 ஸ்டால்களுடன் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

திண்டுக்கல்லில் தனியார் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்த சம்பவத்தில் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை செயலர், டிஜிபி ஆகியோர் விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவிக்கு தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.

ஈரோட்டில் வாகன சோதனையில் நிற்காமல் இருசக்கர வாகனத்தை எஸ்.ஐ. மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வேகமாக வந்த இளைஞர்கள் பைக்கை நிறுத்தாமல் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர். பைக் மோதி கீழே விழுந்த உதவி ஆய்வாளர் கிருஷ்ணனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் மீது பைக் ஏற்றி விபத்தை ஏற்படுத்திய கமலேஷ், ராகவன் ஆகியோரை கருங்கல்பாளையம் போலீஸ் கைது செய்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,905-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 உயர்ந்து ரூ.67, 000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.50 உயர்ந்து 67.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.