வ.உ.சி

0
186

வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர். மேலும் அந்த காலத்தில் தமிழ் தெரிந்த அளவிற்கு ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞரும் இவர்தான்.இவர் ஆங்கிலேய கப்பல்களுக்கு போட்டியாக தூத்துக்குடி முதல் கொழும்பு வரை கப்பல் போக்குவரத்தை துவங்கினார். இதனால் இவர் “கப்பலோட்டிய தமிழன்” என்ற அடையாளத்துடன் திகழ்ந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை மற்றும் பரமாயி அம்மாள் என்கின்ற தம்பதிக்கு செப்டம்பர் 5, 1872ஆம் ஆண்டு மூத்த மகனாக பிறந்தார். இவரது கும்பம் ஒரு சைவ வெள்ளாளர் மரபினை சார்ந்தது.

இயற்பெயர் –

வ.உ.சிதம்பரம் பிள்ளை
பிறந்ததேதி மற்றும் வருடம் – செப்டம்பர் 5, 1872
பெற்றோர் – உலகநாத பிள்ளை மற்றும் பரமாயி அம்மாள்
பிறந்த ஊர் – ஓட்டப்பிடாரம் [தூத்துக்குடி]

வ.உ.சிக்கு கல்வி கற்பதில் ஆர்வம் அதிகம் நிறைந்து காணப்பட்டார். இருந்தாலும் அவர் இருந்த காலகட்டத்தில் நினைத்த நேரத்தில் கல்வி கிடைப்பது கடினம். ஆகையால், தனது பாட்டியிடம் சிவனை மையமாக வைத்து எழுதப்பட்ட புராணங்களையும், பாட்டனாரிடம் ராமாயணத்தினையும் மற்றும் அவரது தாத்தா மற்றும் அவரது நண்பர் ஒருவரது உதவியின் மூலம் மஹாபாரதத்தினையும் முழுவதும் தெரிந்து கொண்டார்.

பிறகு தனக்கு தெரிந்த ஒரு அரசாங்க அதிகாரி மூலம் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். பிறகு தனது 14ஆம் வயதில் தூத்துக்குடி சென்று பயின்றார். அதனை தொடர்ந்து திருநெல்வேலி சென்று கல்வி கற்றார்.

வழக்கறிஞராக வ.உ.சிதம்பரம் பிள்ளை :

வ.உ.சி வளர்ந்ததும் முதலில் தாலுகா அலுவலகத்தில் சில காலம் பணியாற்றினார்.பிறகு அவரது தந்தை அவரை சட்ட படிப்பை மேற்கொள்ளுமாறு கூறி அவரை திருச்சிக்கு அனுப்பினார் . ஐவரும் திருச்சிக்கு சென்று படிப்பினை வெற்றிகரமாக முடித்து திரும்பினார். இவர் குற்றவியல் [crime] மற்றும் உரிமையியல் [rights] ஆகிய பிரிவில் சட்டத்தில் தேர்ந்தார்.

பிறகு ஓட்ட பிடாரத்தில் தனது வழக்கறிஞர் தொழிலை துவங்கிய இவர் ஏழைகளுக்காக இலவசமாக வாதாடினார். மேலும் சிறப்பாக வாதாடி பல வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் நீதிபதிகளின் நன்மதிப்பினையும் பெற்றார். இதனால் அவரது தொடர் வெற்றியின் காரணமாக அவரை யாராவது ஏதாவது செய்யப்போகிறார்கள் என்று எண்ணிய அவர் தனது மகனை தூத்துக்குடிக்கு அனுப்பினார்.

பாரதியாரின் நண்பர் :

வ.உ.சி எப்போது சென்னை சென்றாலும் பாரதியாரை சந்திப்பது வழக்கம். ஏனெனில் இவரது தந்தையும் பாரதியாரின் தந்தையும் நல்ல நண்பர்கள். அதுபோன்றே இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம் அவ்வாறு பேசும்போதெல்லாம் நாட்டினை பற்றியே அதிகமாக பேசுவார்களாம்.

பாரதியார் யார் என்று கூறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவரை பற்றி ஒற்றை வரி கூறவேண்டும் என்றால் தனது கவிதைகள் மூலம் சுதந்திரத்தை வலியுறுத்திய ஒரு மாபெரும் புலவர். பாரதியாரது கவிதைகள் வ.உ.சிக்கு எப்போதும் பிடித்த ஒன்று.

சுதேசி கப்பல் நிறுவனம் :

ஆங்கிலேயர்கள் வாணிபம் செய்ய இந்தியாவிற்குள் நுழைந்து பிறகு நாட்டினை ஆளத்துவங்கியது நாம் அறிந்ததே . அந்த வாணிபத்தினை நிறுத்த நினைத்த வ.உ.சி ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக கப்பல் போக்குவரத்தினை துவங்கினார். ஆனால் அவர் முதலில் துவங்கிய போது வாடகை கப்பலை எடுத்து நடத்தியதால் அதனை தொடர்ந்து அவரால் நடத்த இயலவில்லை.

பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.
பிரித்தானியர்களுக்கு சவாலாக தொடங்கப்பட்ட கப்பல் நிறுவனம்,இதை வளர்க்க இவர் பங்குகளை
கையாண்ட விதம் சிறப்பானது.இன்று போல விரிந்த பங்கு சந்தை வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பங்குகளை இந்த கப்பல் நிறுவனத்துக்காக திறமையால் சேர்த்தார்.

சுதேசிய நாவாய் சங்கம்
“பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி”, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.
வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங