கார சட்னி

0
117

தேவையானவை

வெங்காயம் – 3
த‌க்கா‌ளி – 1
உளு‌த்த‌ம் பரு‌ப்பு – ஒரு கை‌ப்‌பிடி
கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் – 6
பு‌ளி – ப‌ட்டா‌ணி அளவு
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு, க‌றிவே‌ப்‌பிலை – தா‌ளி‌க்க
உப்பு – தேவைக்கேறப

செ‌ய்யு‌ம் முறை

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி உளு‌த்த‌ம் பரு‌ப்பை‌ப் போட்டு பொ‌ன் வறுவலாக வறு‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அதே எ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌‌ந்த ‌மிளகா‌ய்களை‌ப் போ‌ட்டு வறு‌த்து‌க் கொ‌ள்ள‌வு‌ம்.

‌பிறகு பெ‌‌ரிதாக நறு‌க்‌கிய வெங்காயம், த‌க்கா‌ளியை‌ப் போட்டு வத‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

‌மி‌க்‌சி ஜா‌ரி‌ல் வத‌க்‌கிய த‌க்கா‌‌ளி, வெ‌ங்காய‌ம், உளு‌த்த‌ம் பரு‌ப்பு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், பு‌ளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளி‌த்து ச‌ட்‌னி‌யி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.

சுவையான கார ச‌ட்‌னி தயா‌ர்.