மொறுமொறுப்பான சேப்பங்கிழங்கு வறுவல்!!

0
25

பருப்பு சாதம், ரசம், தயிர், கலவைச் சாதம் ஆகியவற்றுக்கு சேப்பங்கிழங்கு வறுவல் சைடிஷ்.
இப்போது இந்த சேப்பங்கிழங்கு வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்

அரைப்பதற்கு :

சேப்பங்கிழங்கு – 500 கிராம்

எண்ணெய் – தேவையான அளவு

பு ண்டு – 8 (தட்டியது)

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பு ன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பு ன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் சேப்பங்கிழங்கை தோல் சீவிக் கொள்ளவும். பின்பு உப்பு போட்டு தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சேப்பங்கிழங்கை வட்டமாக அல்லது நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வெட்டிய சேப்பங்கிழங்கு மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுக்க வேண்டும். குழையக் கூடாது. அரை பதத்தில் இருக்க வேண்டும். பின் தண்ணீர் வடித்து ஆறியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சு டானதும் தட்டிய பு ண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய சேப்பங்கிழங்கு போட்டு நன்றாக கிளறி மூடி வேக விடவும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து கிளறி விட வேண்டும். சிறிது நேரம் வேக விட்டு எடுத்தால், சு ப்பரான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்!!!