ஹிரா ரத்தன் மானக்

0
44

100 நாட்கள் சாப்பிடாமல் இருந்த இந்தியர்!
எப்படி சாத்தியமானது?

நாஸா வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்

ரா ரத்தன் மானக்

அதிகாலையில் சூரியனின் கதிர்களை வெறும் கண்ணால் பார்த்து வணங்குவது ,நம் பண்பாடுகளில் ஒன்று (Hindus)

இந்நிலையில் சூரியனைப் பார்த்தால் டெலிபதி போன்ற ‘Super Human Abilities’ எனப்படும் சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்றும் உணவு உண்ணாமல் கூட வாழலாம் எனவும் நாஸா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

பொதுவாக சூரியனை பார்த்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும் என இந்தியாவில் நம்பப்பட்டு வருகிறது. எனவேதான் சூரியனை பார்த்து வணங்குவது, இந்துக்களின் முக்கியமான வழிபாட்டு முறையாக இந்தியாவில் உள்ளது.

சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்காத சக்திகளை பெற முடியும் என இப்பொழுது ஆச்சரியப்படுத்தியுள்ளது நாஸா.

சூரியனை பார்ப்பது என்பது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் சூரியனை பார்ப்பதாகும்.

இந்த செயல்முறையின் போது நாம் வெறும்காலுடன் இருத்தல் அவசியம். பூமிக்கும் சூரியனுக்குமான ஒரு இணைப்புப் பாலமாக நாம் செயல்பட வேண்டும். இதனை தொடர்ச்சியாக, சரியான முறையில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு உணவுத் தேவை என்பது மிகக் குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

தன்னை ‘சூரியக்கதிர்களை உண்பவன்’என அழைத்துக் கொள்ளும் இந்தியாவைச் சேர்ந்த ஹிரா ரத்தன் மானக் என்பவர் தன்னை ஆராய்ச்சி செய்யுமாறு NASA விஞ்ஞானிகளை அணுகினார்.

நாஸாவினால் நிதியுதவி பெறக் கூடிய பென்சில்வேனியா மருத்துவர்கள் குழு அவரை ஆராய்ச்சி செய்த போது,

பல ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைத்தன.

சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சிறப்பு சக்தியால் அவர் உணவு உண்பதே இல்லை என மருத்துவர்கள் அறிந்தனர்.100 நாட்களுக்கு அவரை தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், ஹிரா ரத்தன் மானக்கினால் சூரிய ஒளியை ஆற்றலாக எடுத்துக் கொண்டு உயிர் வாழ முடிகிறது எனவும் இந்த காலகட்டத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மோர் மட்டுமே அவர் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

he
முதல் 3 மாத காலத்திற்கு சூரியனை பார்க்கும் போது சூரியனின் ஆற்றலானது கண்கள் வழியாக சென்று ‘ஹைபோதாலமஸ் பாதை’ என்கிற அங்கத்தில்

தனது சக்தியை சேர்க்கிறது.கண்களில் உள்ள ரெட்டினா வுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதையை ஹைபோதாலமஸ் என அழைக்கப்படுகிறது

இதன் பின்னர் இந்த பதை வழியாக சூரிய ஆற்றலானது மூளையை அடைகிறது அதன் பின்னர் மன அழுத்தம் பசி ஆகியவை சிறிது சிறிதாக குறைய தொடங்கும்.. மேலும் மனிதனிடம் இருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் கெட்ட பழக்கங்கள் மறைந்து போகும். சூரியனை பார்த்தல் செயல்முறையில் செய்ய தொடங்கிய 3 மாதத்திற்குளிலிருந்து 6 மாதத்திற்குள் உடலில் உள்ள நோய்கள் மறைந்து போகுமாம் இதற்கு காரணம் சூரியனிடமிருந்து வெளிப்படும் வண்ணங்கள்.. நம் உடலில் உள்ள இந்த பல்வேறு பாகங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்துவது தான்.

வண்ண மருத்துவம் எனப்படும் துறையை சார்ந்தவர்களும் இதனை உறுதிப்படுத்துகின்றனர். குறிப்பாக கல்லீரல் நோய்களுக்கு பச்சை நிறமும் , இதயத்திற்கு மஞ்சள் , சிறுநீரகத்திற்கு சிவப்பு ஆகிய வண்ணங்கள் குணமளிக்கின்றினவாம்.. வானவில்லில் இருக்கக்கூடிய அனைத்து வண்ணங்களும் சூரிய ஒளி வழியாக நம் உடலில் புகுந்து நோய்களை குணமாகின்றன.

சூரியனைப் பார்த்தல் செயல்பாட்டின் நிபுணர்கள்.. உடலுக்கு தேவை உணவு இல்லை அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் தான் உடலை இயக்க தேவை எனவும் கூறுகின்றனர் . அந்த ஆற்றல் சூரிய ஒளி மூலமாக கிடைத்துவிடுவதால் உணவு தேவையில்லை என்று தெரிவிக்கின்றனர்.

சரியான நேரத்தில் சரியான வழிமுறைகளுடன் சூரியனைப் பார்த்தால் எந்த வித பாதிப்பும் கண்களுக்கும் ஏற்படாது என்று தெரிவித்தனர்.

சூரிய ஒளியின் பயன்கள் அனேகம் அதை சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொள்வோம்