இரவு செய்திகள்

நகரில் நடந்த நிகழ்வுகள் செய்தி துளி

இரவு செய்திகள்

கரூர் மாவட்டத்தில்

உள்ள 8 ஒன்றியங்களிலும் திமுகவை கண்டித்து  அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, கடவூர் ஆகிய 8 ஒன்றியங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அந்தந்த பகுதி ஒன்றிய கழக செயலாளர் தலைமை வகித்தனர்.
 தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவு ஆகியவற்றை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர்.

 

தூத்துக்குடி

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்க பதக்கம் பெற்ற 27 மாணவ, மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் வாழ்த்து பெற்றனர்
 

கடலூர் 

புதுப்பாளையைம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க வந்த டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. யூடியூப்பர் டிடிஎஃப் வாசனை காண வந்தவர்களை விரட்டியடித்த போலீசார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.
 

விழுப்புரம்:

திண்டிவனம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்ற சோழன் ரயிலில் சோதனை நடத்தியபோது ரூ.580 லட்சம் மதிப்புள்ள நகைகள் பிடிபட்டன.
 

தூத்துக்குடி

அருகே நடுக்கடலில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள தெண்டு இலைகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீடி சுற்றுவதற்கான தெண்டு இலைகளை மூட்டை மூட்டையாக இலங்கைக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டது. இந்திய கடலோர காவல்படையினர் வஜ்ரா கப்பல் ரோந்து சென்றபோது பீடி இலைகளை  ஏற்றிவந்த படகை மறித்து பறிமுதல் செய்தது.
 

நீலகிரி 

குன்னூரில் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு: தண்ணீா் அடித்துச் சென்ற வாகனங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது
 

திருவண்ணாமலை 

செய்யாறு அருகே பொதுமக்கள் தவிப்பு ஏரி நீரில் மூழ்கிய பாராசூர்- நெல்வாய் சாலை: உடனடியாக சீரமைக்க கோரிக்கை
 

தேனி மாவட்டம்

வருசநாடு அருகே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை; மூல வைகையாறு, சின்னச்சுருளி, யானைகெஜம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: விவசாயிகள் மகிழ்ச்சி
 

ஈரோடு
நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது

 

புதுச்சேரி 

திருநள்ளாறு சனிபகவான் கோயில் அருகே ரூ.7.20 கோடியில் ஆன்மீக பூங்கா திறக்கப்பட்டது. பக்தர்கள் மகிழ்ச்சி