நந்தி வழிபாடு நற்கதியளிக்குமா?..

0
30

 

‘ந’ என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு.

அதிகார நந்தி:

சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று, நந்தியம்பெருமாளின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர்.

மால்விடை நந்தி:

சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்திக்கு அடுத்து ஒரு நந்தி காட்சிதரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால், நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்கிறது புராணம்.

பிராகார நந்தி:

கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிரகார நந்தி என்பர்.

தர்ம நந்தி:

சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும்.

ஒன்பது வகை நந்திகள்:

பழைமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை:

1. பத்ம நந்தி,
2. நாக நந்தி,
3. விநாயக நந்தி,
4. மகா நந்தி,
5. சோம நந்தி,
6. சூரிய நந்தி,
7. கருட நந்தி,
8. விஷ்ணு நந்தி,
9. சிவ நந்தி ஆகியன.

இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது சிவசக்திகுழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏