இந்திய குடியுரிமையை பெற..

0
70

இந்திய குடியுரிமையைப் பெறும் முறைகள்:- (5)

 1. பிறப்பு (By Birth)
 2. மரபுவழி (By DeSupreme Court )
 3. பதிவு (By registration )
 4. இயல்பூட்டுதல் (By Naturalisation)
 5. நிலப்பகுதி இணைப்பு (By incorporation of Territories)

பிறப்பு:-

 • இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ன் படி இந்திய எல்லைக்கள் 1950 ஜனவா 26 க்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இந்தியக் குடியுரிமை பெறுகின்றன.
 • ஆனால் வெளிநாட்டு தூதுவர்கள், அன்னியர்கள் தவிர. – 1986 ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்திற்கு பின்னர் குழந்தையின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருப்பின் அவர் பிறப்பில் குடிமகனாவார்.

மரபுவழி:-

 • ஜனவரி 26, 1950 க்கு முன்பே (அ) பின்பே இந்திய எல்லைக்கு அப்பால் பிறகு வாழும் இந்திய குடிமக்களின்

(தாய் (4) தந்தை)குழந்தைகள் மரபுவழிக் குடியுரிமை பெறுவார்கள்.

பதிவு:-

 • இந்தியா வம்சவழியினர்கள் இந்தியாவில் 7 வருடம் தங்கியிருந்தால்
 • வெளிநாடுகளில் குடியிருக்கும் இந்திய வம்சாவழியினர்
 • – குடியுரிமை பெற்ற இந்தியரை மணக்கும் வெளிநாட்டு பெண்கள் இந்தியாவில் 7 ஆண்டுகள் தங்கியிருந்தால்
 • இந்தியாவில் பிறக்காமல் அவர்களது. பெற்றோர்கள் இந்தியாவில் பிறந்திருந்தால்
 • காமன்வேல்த் நாடுகளை சேர்த்த வயது வந்தோர் போன்றவர்களுக்கும் பதிவு மூலம் இந்திய குடியுரிமை பெறலாம்.

இயல்பூட்டுதல் (Naturalization):-

 • வெளிநாட்டவர்கள் இந்தியாவில் 12 ஆண்டுகள் குடியிருந்தால் இயல்பூட்டுதல் மூலம் இந்திய குடியுரிமை வழங்கப்படலாம்.

நிபந்தணைகள்:-

 • தகுதியற்ற நாடு என இந்தியாவில் அறிவிக்கப்படாத நாட்டை சேர்ந்தவராக இருத்தல்
 • தன் தாய் நாட்டின் குடியுரிமையை துறந்தவராக இருத்தல்
 • நல்ல பண்புடையவராக இருத்தல்
 • இந்திய அட்டவணையில் உள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்றை அறிந்திருத்தல் வேண்டும்.
 • இந்திய அரசுப் பணியில் (அ) இந்தியாவில் குறைந்தது ஓர் ஆண்டாவது இந்தியாவில் வாழ்ந்து இருத்தல்
  (மனு செய்யும் ஆண்டிற்கு முந்தையை ஆண்டு).
 • குடியுரிமை சான்று வழங்கப்படும் பட்சத்தில் தொடர்ந்து இந்தியாவில் குடியிருக்க ஒப்புதல் அளித்தல்.

அறிவியல், தத்துவம், கலாச்சாரம், இலக்கியம், உலக அமைதி, மனித இன மேம்பாடு போன்ற துறைகளில் சிறப்பான சேவை செய்த வெளிநாட்டவர்களக்கு அரசு மேற்கொண்ட நிபந்தனைகளிலிருந்து விதி விலக்கு அளித்தும் இயல்பூட்டுதல் மூலம் குடியுரிமை வழங்கலாம்.

 • அன்னை தெரசா இதன் மூலம் குடியரிமை பெற்றார்.

நிலப்பகுதி இணைப்பு:

 • புதியதாக ஓர் நிலப்பகுதி இந்தியாவுடன் இணைவது மூலம் அப்பகுதி மக்களும் இந்திய குடிமக்களாக கருதப்படுவர்

கோவா, டையூ, டாமன், பாண்டிச்சேரி

குடியுரிமையை இழக்கும் முறைகள் (3)

 1. துறத்தல் (Renunciation)
 2. முடிவுக்கு வருதல் (Termination)
 3. நீக்குதல்(Deprivation)
 4. துறத்தல்
 • குடியுரிமையை தானாக முன்வந்து துறப்பது முடிவுக்கு வருதல் (வேறொரு நாட்டின் குடியுரிமை அடைந்தால்)
 1. முடிவுக்கு வருதல்:-
 • சட்டத்தினால் குடியுரிமையை முடிவுக்கு கொண்டுவருதல்
  நீக்குதல்
 1. நீக்குதல் (குடியுரிமையை இழக்கச் செய்வது)
 • தவறான வழிகளை பின்பற்றி பதிவு முறையின் மூலமாக அல்லது குடிமக்களாக ஏற்றுக்கொள்ளும் முறையின் மூலம் பெற்ற குடியுரிமையை கட்டாயமாக நீக்குதல். (Refer classnotes).