உலர்பழம் – கோதுமை ரொட்டி அடுக்கு

0
96

தேவையானவை:

கோதுமை பிரெட் – 3 ஸ்லைஸ்,

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் – தேவையான அளவு,

நறுக்கிய செர்ரி பழம், காய்ந்த திராட்சை, பதப்படுத்திய அத்திப்பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – தலா ஒரு டீஸ்பூன்,

உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, அக்ரூட் (சேர்த்து) – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பிரெட் ஸ்லை ஸில்… செர்ரி, அத்திபழம், காய்ந்த திராட்சையை வைக்கவும்.

மற்றொரு ஸ்லைஸில் உடைத்த பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை வைக்கவும்.

மற்றொரு ஸ்லைஸில் மிக்ஸ்டு புரூட் ஜாம் தடவவும்.

3 ஸ்லைஸ்களையும் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி, நடுவே வெட்டி பரிமாறவும்.