எக் சிக்கன் நூடுல்ஸ்

0
207

தேவையான பொருட்கள் :

எக் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்று
சிக்கன்2 துண்டு (எலும்பில்லாதது)
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3
சிகப்பு குடைமிளகாய் கால் பகுதி
ஆரஞ்சு குடைமிளகாய் கால் பகுதி
பச்சை குடைமிளகாய் கால் பகுதி
முட்டைகோஸ்7 இலைகள்,
காரட் 1
சோயா சாஸ் 3 டேபிள் ஸ்பு ன்
எண்ணெய்6 டீஸ்பு ன்
உப்புதேவையான அளவு

செய்முறை :

எக் சிக்கன் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் காய்களை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பிறகு சிக்கனை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு லிட்டர் அளவு நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி , அடுப்பில் வைத்து, தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸை சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும்.

பிறகு நூடுல்ஸை வடிக்கட்டி, அதில் குளிர்ந்த நீரை ஊற்றி அலசி எடுக்கவும். பிறகு ஒரு அகலமான வாணலியில் எண்ணெயை ஊற்றி சு டானதும், அதில் சிக்கனைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

அதன் பிறகு வெங்காயம், முட்டை கோஸ், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி, அதனுடன் குடைமிளகாய்களையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு அதில் சோயாசாஸ் சேர்த்து கிளறவும். பிறகு அதில் நு}டுல்ஸை சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும். சுவையான எக் சிக்கன் நூடுல்ஸ் ரெடி