12 மணி செய்திகள்

நவ 24 க்கான நண்பகல் செய்திகள்

12 மணி செய்திகள்

சீனாவில் புதிய உச்சம் பெறும் கொரோனா!
சீனாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில் புதிய உச்சமாக ஒரேநாளில் 31,354 பேருக்கு பாதிப்பு.

சீனாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு, பெரிய அளவில் சோதனை, பயண கட்டுப்பாடுகள் விதிப்பு.

---------------------------------------------
சென்னை, தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் டிசம்பர் 2ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை
தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு
--------------------------------------------
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
---------------------------------------------
காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்கும் வகையில் 3-வது ரயில் திருச்சியில் இருந்து வாரணாசிக்கு இன்று புறப்படுகிறது.
---------------------------------------------
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை வேலூர், விழுப்புரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்
----------------------------------------------
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை: எல்லை தாண்டி வந்ததாக ஜிபிஎஸ் வரைபடம் வெளியீடு
—--------------------------------------------
பன்னாட்டு மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள், வீராங்கனைகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
----------------------------------------------
சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை: உயர்நீதிமன்றம்.
------------------------------------------------
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பேரை கைது செய்தது காவல்துறை
சாலைமறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது காவல்துறை.
-----------------------------------------------
ஜெருசலேம் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்:
பிரான்ஸ் அணியை டைபிரேக்கர் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா;
உஸ்பெகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை.
-----------------------------------------------
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம்;
மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைகளை முழுவதும் அனுபவிக்கும் விதத்தில் கொள்கைகளை வகுப்பது குறித்து ஆலோசனை.
-----------------------------------------------
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.
------------------------------------------------காங்., தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் நவ 15ம் தேதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று விசாரணை;
காங்கிரஸ் எஸ்சி துறை மாநில தலைவர் ரஞ்சன் குமார் குழு முன் ஆஜராகி விளக்கமளிக்கிறார்.
-----------------------------------------------
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 180 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
------------------------------------------------
ஆடியோ விவகாரம் 15 நாட்களுக்கு முன்பே தெரிந்து மறைத்தார்.. அண்ணாமலை மீது போலீஸில் புகார்

பாஜக மாநில நிர்வாகியின் ஆடியோ விவகாரத்தில் குற்றத்தை மறைத்த அந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய மதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
மதுரை கே கே நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். இவர் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் கொடுத்துள்ளார்.
-----------------------------------------------