காலை 9 மணிக்கான செய்திகள்

நவ 25 க்கான காலை செய்திகளில்

காலை 9 மணிக்கான செய்திகள்

நாமக்கல் அருகே தோளூரில் கோழிப்பண்ணை தீவன இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் 6 வயது மகள் உயிரிழந்தார்.

பீகாரை சேர்ந்த தொழிலாளி தர்மேந்திர குமாரின் மகன் நிவாகுமாரி இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.
__________________________

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் முழுவதும் பனிமூட்டமாக இருந்தது.  பனி ஆரம்பித்துள்ளதால் குளு குளு சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சி
__________________________

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரக்கோணம் சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டிட பணி நடைபெற்று கொண்டு இருக்கும் பின்புறத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் பன்னீர்செல்வம் என்பவர் வீடு கட்டி இருப்பதாக கூறி வீட்டின் 25 சதவீத கட்டிடத்தை இடிப்பதற்கு 50 போலீசார் உடன் மற்றும் மின்சார துறை அலுவலர்கள், நகராட்சி அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டனர்..
__________________________

சென்னை எழும்பூரில் போலீஸ் என கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.25,000 பணம் பறித்த ஊர்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார். பொது இடத்தில் புகை பிடித்த தனியார் நிறுவன ஊழியர் கேசவனை (24) சிறையில் தள்ளி விடுவேன் என மிரட்டி பணம் பறித்துள்ளார். கேசவன் அளித்த புகாரின் பேரில் ஊர்காவல் படை வீரர் டான்ஸ் ஸ்டூவர்ட்டை எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.
__________________________

நாகை மாவட்டம் சிவசத்தி நகரில் கோயில் கட்டுமான பணியின்போது ஸ்தபதி ராஜா என்பவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். சிதம்பரத்தை சேர்ந்த ஸ்தபதி ராஜா உயிரிழந்தது தொடர்பாக வெள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
__________________________

கள்ளக்குறிச்சி:தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கள்ளக்குறிச்சி - தச்சூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
__________________________

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3-வது மாடியிலிருந்து ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் லிஃப்டில் வந்துள்ளனர்.
எதிர்பாராத வகையில் லிஃப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கதவை உடைத்து அனைவரையும் மீட்டுள்ளனர்
__________________________

சென்னை  தாம்பரம் அருகே பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புகை வருவதை கண்ட பயணிகள் கூச்சலிட்டு உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கிவிடப்பட்டனர். தண்ணீர் ஊற்றி புகை அணைக்கப்பட்டது. இதனால் தாம்பரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
__________________________

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைதிந்திய மாதர் சங்கத்தினர் கைது;
 சாலை சந்திப்பில் கூடியவர்கள் கைது: 
__________________________

கோவை
சிறைக் கைதிகள், உறவினர்கள் பேசிக்கொள்ள வசதியாக இன்டர்காம் தொலைபேசி : தமிழகத்திலேயே முதல்முறையாக கோவை சிறையில் புதிய வசதி அறிமுகம்