குதிகால் வெடிப்பை சரிசெய்யும் சில சிம்பிள் டிப்ஸ் !!

0
24

அழகு என்பது வெறும் முகத்தில் மட்டும் இல்லை. தலை முதல் கால் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வைத்துக் கொள்வது தான் உண்மையான அழகு.

கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும்.

குதிகால் வெடிப்பு ஒருவருக்கு இருந்து, அதனை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் முற்றிய நிலையில் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்பதை தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் போய், வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை ஏற்படுத்துகிறது. உடல் எடை அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும்.

நீரிலேயே நீண்ட நேரம் இருந்தால், அதனால் கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்ப்பசை அனைத்தும் வெளியேறிவிடும்.

எங்கு சென்றாலும் காலணி அணிந்து செல்லுங்கள். வெளியில் சென்று வந்தவுடன் கால் பாதங்களை நன்றாக கழுவுங்கள். வறட்சியான சருமத்தினர், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, தினமும் மாய்ஸ்சுரைசர் எனப்படும் கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. இது கால் பாதத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here