தேவையான பொருட்கள்
பலாக் கொட்டை – 10 (தோல் நீக்கி, மெலிதாக நறுக்கவும்),
பால் (காய்ச்சி ஆற வைத்தது) – அரை கப்,
எண்ணெய் – அரை டீஸ் பூன்,
நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல் – தலா 2 டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு பலாக்கொட்டை, உப்பு சேர்த்து வதக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் பலாக்கொட்டை, தேங்காய்த் துருவல், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுது, நாட்டு சர்க்கரை, பால் சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சூடான பலாக்கொட்டை இனிப்பு கஞ்சி தயார்…✍️🌹